thamizh kadamaigal 2: perunchithiranar: தமிழ்க்கடமைகள் 2: தமிழ் வாழவேண்டுமெனில் : பாவலரேறு பெருஞ்சித்திரனார்


தமிழ் வாழவேண்டுமெனில்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 17, 2011

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரததல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்
முந்தைவர லாறறிநது தெளிதல் வேண்டும்
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!
தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ்வழக்கை நீக்கல்  வேண்டும்
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள்  தோறும்
தொங்குகின்ற பலகைகளை மாற்றச்  சொல்லக்
கண்டுநிகார் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும்
கற்கின்ற சுவடிகளில் செய்தித் தாளில்
விண்டுரைக்கா  அறிவியலில் கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ்; வாழும் அன்றே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்