thirukkural திருக்குறள் 461

திருக்குறள்

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 

 

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும். 

திருக்குறள் (எண்: 461)

 அதிகாரம்: தெரிந்து செயல்வகை


Comments