Posts

Showing posts from February, 2020

மூச்சுக் காற்றாய் என் தமிழ்! – ஆற்காடு க.குமரன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 பிப்பிரவரி 2020         கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ்!  தா யின்றி எவனுமில்லை  தாய் மொழியின்றி ஏதுமில்லை வளைந்து நெளிந்து குழைந்து மூ க்கோடு பேசும் மூச்சுக் காற்றாய் என் தமிழ் பெ ருமூச்சு நெடில் சிறு மூச்சு குறில் மருத்துவமும் கண்டது மகத்துவமும் கொண்டது  என் தமிழ் அ ரை மாத்திரை கால் மாத்திரை  முழு மாத்திரை இலக்கணத்தோடு இனியதமிழ் த மிழ் ஒன்றே நாவை நடமாடச் செய்யும் அயல் மொழிகள் நுனி  நாக்கோடு எச்சில் போல் சிதறும் பேசிப்பார் அஃதுனக்குப் புரியும் தா ய்ப்பாலும் கள்ளிப்பாலும் வெண்மைதான் பருகிப்பார் புரியும் உண்மைதான் உயிரும் மெய்யும் கலந்த உன்னத மொழி வா சித்துப் பார் உதயமாகும்  மழலை உணர்வு. எ ழுதிப் பார்  என் எழுத்துகள் அத்தனையும் ஓவியங்கள் க ட்டியவளுக்காகப் பெற்றவளைத் தவிக்கவிடும் கயவர்களே! க ட்டியவளும் தாயாவாள் காலத்தே தனியா வாள் உணர்ந்திடு! திருந்திடு! ச ங்கம் கண்ட  தங்கம் அது வீரம் நிறைந்த சிங்கம் இது! மூ ச்சு பேச்சு  உடல் உயிர் எண்ணம் எழு

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 பிப்பிரவரி 2020         கருத்திற்காக.. (திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 7.2.4.முகன்அமர்ந்[து] இன்சொல் [குறள்.92] அறிபொருள்: முகம் மலரச் சொல்லும் இனிய சொற்கள் 7.2.5.அகத்தான்ஆம் இன்சொல் [குறள்.93] அறிபொருள்: உள்ளத்தில் உருவாகி வெளிவரும் இனிய சொற்கள் 7.2.6.நல்லவை நாடி இனிய சொலல் [குறள்.96] அறிபொருள்: நல்ல சொற்களை ஆராய்ந்து இனிமையாகச் சொல்லுதல் 7.2.7.புறம்கூறான் [குறள்.1181] அறிபொருள்: கோள் சொல்லாமை 7.2.8.பயன்இல சொல்லுவான் [குறள்.191] அறியப்படுபொருள்: பயன் உள்ள சொற்களைப் பேசுதல் 7.2.9.பொருள்தீர்ந்த,,சொல்லார் [குறள்.199] அறியப்படுபொருள்: பொருள் உள்ள சொற்களைச் சொல்லுதல் 7.2.10.இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் [குறள்.415] அறிபொருள்: வழுக்கல் நிலத்தில் விழாமல் காக்கும் ஊன்றுகோல்போல் பயன்படும் ஒழுக்கத்தாரது வாய்மைச் சொற்கள் 7.2.11.எண்பொருள வாகச் செலச்சொல்லி [குறள்.424] அறிபொருள்: நுண்பொருளையும் மனத்திற்குள் சென்று பதியும்படி எளி

தந்தை பெரியார் சிந்தனைகள் 8 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         11 பிப்பிரவரி 2020         கருத்திற்காக.. (தந்தை பெரியார் சிந்தனைகள் 7 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 8 திருவாழி:  சக்கரபாணி என்பது திருமாலின் மற்றொரு பெயர். அண்டங்களின் நடைமுறையை விளக்குவது சக்கரம். கோள் எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. வட்டமிடுவது அவற்றின் இயல்பு. நட்சத்திரங்கள் பல நேரே ஓடிக் கொண்டுள்ளனபோலத் தென்படுகின்றன. பெருவேகத்துடன் பல்லாண்டு பல்லாண்டுகளாகப் பறந்தோடி ஒரு வட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஒன்றுக்கு அப்பால் ஒன்று அனந்தம் சக்கரங்கள் ஓயாது சுழல்கின்றன. அவையாவும் திருமாலின் திருச்சக்கரத்தில் தாங்கப்பெற்றுள்ளன. அண்டங்கள் யாவையும் உண்டு பண்ணுதலும், நிலைபெறச் செய்தலும், பின்பு அவற்றை நீக்குதலும் நாராயணனின் ‘அலகிலா விளையாட்டுச்’ செயல்கள்; நிரந்தரமான செயல்கள். சக்கரம் சுழல்வது போன்று இச்செயல்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. முடிவில்லாத விளையாட்டாக முகுந்தன் முத்தொழில்களையும் முறையாகச் செய்துவருகின்றான். இதனைத் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அபயங்கார், ஞாலத் திகிரி முதுநீர்த்திகிரி ⁠நடாத்தும் அந்தக் காலத் திகி

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3/6 : பேராசிரியர் வெ.அரங்கராசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         10 பிப்பிரவரி 2020         கருத்திற்காக.. ( திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2/6 தொடர்ச்சி ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 3 / 6   6.1.21.நாடோறும் நாடுக மன்னன்                                             [குறள்.520]         அறிபொருள்:              நாள்தோறும் ஆட்சியை ஆராயும் நாடாள்வோர் மனம்   6.1.22.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை                     [குறள்.282]        அறிபொருள்:        மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் கிடைத்தலை ஆராயும் மனம்   6.1.23.உடையர் எனப்படுவ[து] ஊக்கம்                  [குறள்.591]         அறிபொருள்:                    ஊக்கம் உள்ள மனம்   6.1 24.உள்ளுவ[து] எல்லாம் உயர்வு                                          [குறள்.596]         அறிபொருள்:         உயர்ந்தவற்றையே எண்ணும் மனம்   6.1.25.எண்ணிய எண்ணியாங்கு  எய்துப, எண்ணியார்        திண்ணியர் ஆகப் பெறின்                    [குறள்.666]        அறிபொருள்:       எண்ணியதை அடைய எண்ணியதையே எண்ணிப் பார்க் கும் திண்ணிய மனம்   6