Posts

Showing posts from April, 2022

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 42

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 May 2022         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41 தொடர்ச்சி) குறிஞ்சி   மலர்   16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.       —  திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை(  ‘தோல் பெல் ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று சொல்ல முடியாது. “ போலீசு  இருக்கிறது, சட்டம் இருக்கிறது, கை வலிக்க நீ ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள், விடு . . .” என்று தன்னைக் கைப்பற்றி விலக்க முயன்ற அரவிந்தனையும் மீறிக்கொண்டு பாய்ந்தான் முருகானந்தம். “விடு அரவிந்தன். இந்த மாதிரி ஏமாற்றுக்காரப் பயல்களைச் சும்மா விடக்கூடாது. எங்கள் தையல் கடையிலே சில முரட்டுத் துணிகள

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 April 2022         No Comment (புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று பெருந்திற லரசு மந்தச் சீரர சதன் கீழ்ச் செங்கோற் றிருவமர் நாடும் நன்னாட் டாரர சதன்கீழ்ச் சீறூ ரரசுமாங் கமைந்து மக்கட் சாரர சுரிமை பூண்டு தமிழகம் பொலிந்த தம்மா. 79, எழுநிலை மாட க டத் தியன்றகல் தெருவும் தாங்கி நழுவிலா வளங்கள் மேவி நல்வழிப் படிவீ டெல்லாம் வழிவழி பெருகி மக்கள் வாழ்வதற் கேற்ற வாறு பழமரச் சோலை சூழ்ந்து பசந்திருந் தனசீ ரூரே. 80, இன்னபல் வளத்த தாகி யியற்கையி னியல்பி யாவும் மன்னிய குறிஞ்சி முல்லை வளமிலி மருத நெய்தல் அந்நெறி யமைந்த செல்வத் தைந்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1291-1300)-இலக்குவனார் திருவள்ளுவன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 April 2022         No Comment [ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1281-1290) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 130. நெஞ்சொடு புலத்தல் 211. அவர் நெஞ்சோ அவரிடம்! ஆனால், என் நெஞ்சோ என்னிடம் இல்லையே! (1291) 212. அன்பு கொள்ளாதவர் மீது நெஞ்சே ஏன் நீ செல்கிறாய்? (1292) 213. கெட்டார்க்கு நட்டார் இல்லை என, நெஞ்சே அவர் பின் செல்கிறாயா? (1293) 214. நெஞ்சே! ஊடல் முடிக்கும் கூடலை அறியாத உன்னிடம் பேசேன். (1294) 215. அவரைக் காணாவிட்டாலும் அச்சம்; கண்டாலும் பிரிவெண்ணி அச்சம். (1295) 216. தனிமையில் நினைத்தல் நெஞ்சை மேலும் வருத்துகிறது. (1296) 217. மறக்க இயலாமல், மறக்கக்கூடா நாணத்தை மறந்தேன். (1297) 218. அவரை இகழ்தல் இழிவென அவரிடமே நெஞ்சு செல்கிறது. (1298) 219. நெஞ்சமே துணைக்கு வராவிட்டால், யார்தான் துணை வருவார்? (1299) 220. நெஞ்சமே உறவாகாதபோது அயலவர் உறவாகாமை இயல்புதானே! (1300) – இலக்குவனார் திருவள்ளுவன் ( தாெடரும்)

‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 April 2022         No Comment ‘பல்லக்குத் தூக்கி’ – 1100 பக்கங்கள் கொண்ட வரலாற்றுப் புதினம்   கவிஞர் வேணு குணசேகரன் படைப்பில் 3 பாகங்கள் கொண்ட 1100 பக்கங்களில்  களப்பிரர், முத்தரையர் கால ஆட்சிப் பின்னணியில் மன்பதை நீதிக்கான வரலாற்றுப் புதினம் பல்லக்குத் தூக்கி பல்லக்குத்தூக்கி  நூல் வெளியீட்டின் முன்பதிவுத் திட்டம் நல்ல தாள், நேர்த்தியான அச்சு, உறுதியான கட்டமைப்பு, அத்தியாயங்களில் அழகிய ஓவியங்கள், 1/8 அளவில் ஏறத்தாழ 1100 பக்கங்கள் கொண்ட இந் நூலின் விலை உரூபாய் 1200/- ஆகும். முன்பதிவின் விலை: 5 படிகளுக்கு உரூபாய் 4500/- தனிப்படிக்கு: உரூபாய் 1000/- முன்பதிவுக்குரிய நூல்கள் பதிப்பகச் செலவில் நூல் வெளியானதும் அனுப்பி வைக்கப்படும். முன்பதிவுச் சலுகையை வாசகர்கள் பயன்படுத்திக் கொண்டு உரிய தொகையை அனுப்பிட  வங்கிக் கணக்கு விவரம்: M/s ARUNALAYA PATHIPAGAM SB A/c : 841463508 Indian Bank, Otteri Branch, Chennai-600 012.IFSC No: IDIB000O004 வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய பின் ஒப்புகைச் சீட்டுடன் தங்கள் முழு முகவரி, பேசி, பிற விவரங்களைப் பதிப்பகத்திற்

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 68

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 April 2022         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள்  தபால்காரர்  ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார். “எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். மாலன் , சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது? நெல் ஆலை வேகமாக முன்னேறிப் பணம் நிறையக் கிடைத்தது என்று எண்ணுவதா? அல்லது சாமியாரின் இரசவாத வித்தை பலித்து வீட்டில் உள்ள செம்பு இரும்பு எல்லாம் பொன்னாகி விட்டன என்று எண்ணுவதா? என்ன என்று தெரியாமல் வியப்போடு அவன் அதில் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன். “அன்புள்ள நண்பா! மன்னிக்க மன்னிக்க மன்னிக்க என்று பல முறை கேட்டுக் கொள்கிறேன். பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பிக் கொடுக்காமல் உன்னைப் பார்ப்பதும் இல்லை

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 41

Image
 அகரமுதல மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41 இலக்குவனார் திருவள்ளுவன்         26 April 2022         No Comment ( மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  40 தொடர்ச்சி) குறிஞ்சி   மலர் 15  தொடர்ச்சி மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின்  கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு  என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறித்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள். அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச் சந்தித்தான். அவர் அவனுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்று எதிரே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். அரவிந்தன் அதில் உட்கார்ந்தான். “சார்! இந்தப் பையன் விசயமாக உங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இவனுடைய அக்காவுக்கு உங்களைச் சந்தித்து இவனைப் பற்றிச் சொல்ல நேரம் ஒழ