Posts

Showing posts from January, 2022

தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 February 2022         No Comment ( தந்தை பெரியார் சிந்தனைகள் 36 இன் தொடர்ச்சி ) தந்தை பெரியார் சிந்தனைகள் 37 7. தமிழ்ப்புலவர்கள் தமிழ் மொழியைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் ஆராய்ந்து பேசும், எழுதும் தமிழ்ப்புலவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கட்கு நல்ல மதிப்பு இல்லை; குறைகள் மிகுந்தவர்கள், ஒழுங்கற்றவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் என்றே கருதுகின்றார். புலவர்களைப் பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகள்: (1) நம்நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. தமிழ்ப்புலவர்கள் ஆரியப்பண்பாடு, பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போனவர்களாவார்கள். மேனாட்டுப் புலவர்கள் இப்படியல்லர்; அவர்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வழியில் பாடுபட்டனர். (2) இன்று புலவர்களில், அறிஞர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்களேயானால் கற்பனையான மூடநம்பிக்கையான இலக்கியங்களை மக்களுக்கு எடுத்துகாட்டி இவற்றைப் பற்றிய மக்கள் கருத்தைத் திருத்திக் கொள்ளவும் செய்வதோடு அதே இலக்கியங்களையும் திருத்தியாக வேண்டும். புதிய புதிய இல

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 27

Image
அகரமுதல  இலக்குவனார் திருவள்ளுவன்         31 January 2022         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 26 தொடர்ச்சி ) குறிஞ்சி மலர் அத்தியாயம் 11 மண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்! இதைத்தன் கண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.       – பாரதிதாசன் மனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ  அப்படி ஒரு கொடுமை அவள் முகவரியைத் தேடிக் கொண்டு வந்து அவளைப் பெருமைப்படுத்துவோர் முன்பு அவள் தலைகுனிந்து நிற்கும்படி செய்திருக்கிறது . எவர்களுக்கு முன் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பற்றி அவள் மணிக்கணக்கில் நின்று கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினாளோ, அவர்களே அவளுடைய ஒழுக்கத்தைப்பற்றி ஐயப்படுகிறார்கள். அன்று வந்திருக்கும் அக்கடிதம் அவ்வாறு ஐயப்படச் செய்கிறது. மொட்டைக் கடிதம் தான். ஆனால் அவளை வேலை

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம். 6-10

Image
அகரமுதல  இலக்குவனார் திருவள்ளுவன்         30 January 2022         No Comment ( இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 1-5 தொடர்ச்சி ) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 6. தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா நன்கட னாடு நனிவளந் தேங்கிப் பொன்கட னாடப் பொலிந்தது காணும்.   ++ கடல்நாடும் கடலும் விரும்பும், பொன் கடன்’ நாடக செல்வம் கடன் கேட்க, ++ 7. ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப தாயய னாட ரவாவுற, நீங்கிப் போயல ரேங்கப் பொலிவுறு செல்வம் தாயது பண்டக சாலையை மானும். 8. ஆயநன் னாட்டி னணியுறுப் பாக ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச் சேயுயர் வானின் றிகழ்மணித் தூணின் மீயுயர் செல்வக் குமரி விளங்கும். 9. அம்மலை தோன்றி யதன்பெயர் பெற்றுக் கைம்மலை கண்டு களித்தெதிர் செல்லும் மைம்மலை போல வளனுறப் பாய்ந்தே அம்மலை நாட்டையவ் வாறணி செய்யும். 10. நாட்டு புகழ்த்தமிழ் நாட்டி னதுதென் கோட்டிலின் றுள்ள குமரி முனைக்கு நோட்ட மிகுமிரு நூறுகற் றெற்கில் ஊட்டுங் குமரியா றோடின காணும். தொடரும் இராவண   காவியம் புலவர்   குழந்தை ++ 9. கைம்மலை-யானை . அ மலைநாடு-குமரி நாடு. இது, பெருவளத்தின் மறுப

ஈழத்துத் திறனாய்வு (தொடர்ச்சி) – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 January 2022         No Comment ( முன்னிதழ்த்தொடர்ச்சி ) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 20 திறனாய்வு (தொடர்ச்சி) 2 உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன  விமர்சனம்   துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்காலக் கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடுபட்டோரே இவ் விமர்சன த் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனால்   பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.   இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய   விமர்சனம்   தோன்றியது. தாம் படைத்த இலக்கியங்களின் புதுமையை நியாயப்படுத்தி எழுதவேண்டிய அவசியம் இக்கால எழுத்தாளர்களுக்கு இருந்தது. இலக்கிய உலகிலே பழைய, வரட்டுத்தனமான பண்டித மனப்பான்மையின் செல்வாக்கை எதிர்த்த, உயிர் உணர்ச்சியுள்ள ஒரு கவிஞனை கதாபாத்திரமாகக் கொண்டு 1940 அளவில்  இலங்கையர்கோன் எழுதிய ‘நாடோடி ‘ என்னும் கதையில், இலக்கியத்தில் இப் பண்டித மனப்பான்மைக்கு எதிரான கலகக் குரலையும் நவீ