Posts

Showing posts from July, 2022

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         31 July 2022         No Comment ( மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63 தொடர்ச்சி ) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல்  பங்களா  கட்டிக் கொண்டார்.  பங்களா  என்றால் சாதாரணமான  பங்களா  இல்லை அது. ஒன்றரை  ஏக்கர்  பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச் சுவர் போலப் பெரிய சுற்றுச் சுவர். இவ்வளவும் சேர்ந்து அதை ஒரு தனித் தோட்டம்( ‘எசுடேட்’)ஆக்கியிருந்தன. அந்தப் பகுதிக்குப் ‘பருமாக்காரர் எசுடேட்’ என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. மகள் வயதில் மனைவியும் கை நிறையச் செல்வமுமாக அந்தக் கிழவர் பருமாவிலிருந்து வந்து இறங்கிய போது பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் இருந்தது உண்மைதான். ஆனால்  பணம் என்பது ஒரு பெரிய பக்கபலமாக இருந்து அவரை மதிக்கவும், பெரிய மனிதராக எல்

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 July 2022         No Comment (புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.13 – 1.6.17 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் ஷ வேறு வண்ணம்           18.     ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை                  பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை                  ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை                  நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.           19.     தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை                  தமிழென துயிரின் காப்புத் தமிழென துளவே மாப்புத்                  தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயாவுப் பட்டி                  தமிழென துரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.           20.    நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்                  வீடெலாந் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண்டாட்டம்                  பாடெலாந் தமிழின் றேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்                  மாடெலாந் தமிழ்ச்சொல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ.      21.     உண்டியை யு

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 July 2022         No Comment (ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 2 பழங்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ மரம் செறிந்த காடுகள்‌ மலிந்திருந்தன. பண்டைத்‌ தமிழரசர்களாகிய கரிகால்‌ வளவன்‌ முதலியோர்‌ காடு கொன்று நாடாக்கினர்‌ என்று கூறப்படுகின்றது.19 ஆயினும்‌, அந்‌ நாளில்‌ இருந்து அழிபட்ட காடுகளின்‌ தன்மையைச்‌ சில ஊர்ப்பெயர்களால்‌, உணரலாம்‌. இக்காலத்தில்‌ பாடல்‌ பெற்ற தலங்கள்‌ என்று போற்றப்படுகின்ற ஊர்கள்‌ முற்காலத்தில்‌ பெரும்பாலும்‌ வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால்‌ அறியப்படும்‌. சிதம்பரம்‌ ஆதியில்‌ தில்லைவனம்‌; மதுரை கடம்பவனம்‌; திருநெல்வேலி வேணுவனம்‌. இவ்வாறே இன்னும்‌ பல வனங்கள்‌ புராணங்களிற்‌ கூறப்படும்‌. 20   தமிழ்‌ நாட்டில்‌ ஆர்க்காடும்‌, ஆலங்காடும்‌, வேற்காடும்‌, களக்காடும்‌ பிற காடுகளும்‌ இருந்தன என்பது ஊர்ப்‌ பெயர்‌களால்‌ விளங்கும்‌. ஆர்‌ என்பது ஆத்தி மரத்தைக்‌ குறிக்கும்‌. 21  ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை “ஆரங்கணணிச்‌ சோழன்‌” என்று சிலப்பதிகாரப்‌ பதிகம்‌ குறிக்கின்றது. அந்நாளில்‌ ஆத்தி மரம்‌ காடு நிறைந்த

அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 6/8

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 July 2022         No Comment (ஏ, தாழ்ந்ததமிழகமே! 5/8 தொடர்ச்சி) அறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! 6/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] இருந்தால் என்ன? இறந்தால் என்ன? அதனால்தான் நமது கவி பாரதிதாசன் இந்த உலகத்தைப் பற்றிப் பாடுகிறார். இந்த உலகத்தில்  நீ பிறந்தது வாழ; வாழ என்றால் நிம்மதியுடன் வாழ; பிறரைச் சுரண்டாமல் வாழ; பிறரை வஞ்சித்தால்தான் வாழலாம் என்ற எண்ணமில்லாமல் வாழ; சுதந்திரமாய் வாழ  என்கிறார். உருதிலே சிறந்த கவியான  இக்குபால்  என்பவர் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது, அச்சமற்ற வாழ்க்கை தேவை என்றார்.  அச்சமற்ற வாழ்க்கை என்றால் அந்நியருக்கு அச்சமற்ற வாழ்க்கை; அறியாமைக்கு அச்சமற்ற வாழ்க்கை; சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு அச்சமற்ற வாழ்க்கை,  அந்த அச்சமற்ற வாழ்க்கையைத்தான் தமிழன் நடத்தவேண்டும். அதற்கு இடையூறாக எந்தக் கட்டுப்பாடுகள் வந்தபோதிலும், தூள்தூளாக்க வேண்டும் இதைத

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         26 July 2022         No Comment ( மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62 தொடர்ச்சி ) குறிஞ்சி   மலர் அத்தியாயம்  23 கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து – இங்கு உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?      – சித்தர் பாடல் ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன . எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் ‘பேய்க்கரும்பு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச் சுவைதான் இராது. பெரிய மனிதர்களைப் போல் தோன்றிக் கொண்டு பெருந்தன்மை சிறிதுமில்லாத  கயவர்களாய்க் கொடியவர்களாய் வாழும் மனிதர்கள் சிலர் நல்ல அரிசியில் கல்போல் சமூகத்தில் கலந்திருக்கிறார்கள்.  இவர்கள் வெளித் தோற்றத்துக்குக் கரும்பு போல் தோன்றினாலும் உண்மையில் சுவை வேறுபடும் பேய்க் கரும்பு போன்றவர்கள் தான். கிராமத்திலிருந்து  தன்னோடு மதுரைக்கு வந்த அந்தப் பெரிய மனிதரின்  சுய  உருவம்