Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2

 அகரமுதல




(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20  தொடர்ச்சி)

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம்
  2. தாய்மொழிப் படலம்       

21.   காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு

                 சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல்

                 ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக்

                 காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர்.

           22.    அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே

                 மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப்

                 புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார்

                 திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர்.

           23.   ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ்

                 சான்றவர்நல் வழிநின்று தமைப்போலத் தமையன்போ

                 டீன்றதமிழ்ப் பெருங்குலத்திற் கியன்றபொது நலஞ்செயவவ்

                 வான்றவர்தஞ் சொற்பொருட்கண் ணமைந்தபழந் தமிழகமே.

——————————————————————————————

           21. தபுதாரநிலை – மனைவியை யிழந்திருத்தல். 1. உயிர் மெய் – பிராணி.

மாக்கள் – பகுத்தறிவில்லாதவர்.

——————————————————————————————

6. தாய்மொழிப் படலம்

எழுசீர் விருத்தம்

           1.     ஊக்கமு முணர்வு முளமுதன் மக்க

                      ளுயிர்மெயி னிருந்துதம் மவரை

                 நீக்கவு மொருவர்க் கொருவர்தங் கருத்தை

                      நினைத்தவா றெதிருரை யாடி

                 மாக்களி லிருந்து மக்களா யுயர்ந்து

                      வாழவும் வகைபட முதலில்

                 ஆக்கிய மொழிநந் தமிழ்மொழி யென்றா

                      லாரிதன் பெருமையை யறைவார்.

2.             பரிதியி லிருந்து சிதறிய வுலகப்

                      பகுதியில் முதலினிற் குளிர்ந்து

                 பெரிதுயிர் வகைகள் முதன்முதல் தோன்றப்

                      பெற்றது பழந்தமி ழகமே;

                 வருதமி ழகத்து மக்களே யுலக

                      மக்களுக் கொருமுதல் மக்கள்

                 தருமுதல் மக்கள் பேசிய மொழிசெந்

                      தமிழெனில் இதற்கிணை யெதுவோ.

(தொடரும்)

இராவண காவியம் – புலவர் குழந்தை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue