Posts

Showing posts from 2022

செந்தமிழ்த் தாயே!- கவிஞர் முடியரசன்

Image
 அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         01 January 2023         No Comment செந்தமிழ்த்   தாயே ! எடுப்பு எங்கள் தமிழ் மொழியே! – உயிரே! -எங்கள் தொடுப்பு இங்குனை நாங்கள் இகழ்ந்தத னாலே இழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம் -எங்கள் முடிப்பு பூமியில் மானிடர் தோன்றிய நாளே பூத்தனை தாமரைப் பூவினைப் போலே பாமிகும் காவியப் பாவையே தாயே பணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே. -எங்கள் இயலிசை கூத்தென இலங்கிடு வாயே எமதுயிர் உணர்வுகள் யாவையும் நீயே மயலெமை நீங்கிட மதியருள் வாயே மைந்தரைக் காத்தருள் செந்தமிழ்த் தாயே. -எங்கள் –  கவிஞர் முடியரசன்

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23

Image
 அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         01 January 2023         No Comment ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ –22  தொடர்ச்சி ) ‘ பழந்தமிழ் ’   இனி  இயற்பெயரால் அறியப்பட்டுள்ள புலவர்களையும் அவர்கள் இயற்றியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பாடல் தொகைகளையும்  காண்போம்.     புலவர் பெயர்                               பாடல் தொகை    1.  அகம்பல்பாலாதனார்                      1    2.  அஞ்சியத்தை மகள் நாகையார்             1    3.  அஞ்சில் அஞ்சியார்                                   1    4.  அண்டர் மகன் குறுவழுதியார்                2    5.  அதியன் விண்ணத்தனார்                         1    6.  அந்தில் இளங்கீரனார்                     1    7.  அம்மூவனார்                                  127    8.  அம்மெய்ய நாகனார்                       1    9.  அல்லம் கீரனார்                                1    10. அழிசி சாத்தனார்                                      1    11. அள்ளூர் நன்முல்லையார்                     11    12. அறிவுடை நம்பி                                4    13. ஆசிரியர் பெருங்கண்ணன்                   

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19

Image
  அகரமுதல ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         31 December 2022         No Comment (ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 18. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19   கிடங்கில்       அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில்  என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய  நல்லியக்கோடன்   என்ற சிற்றரசனது பெருமையைச்  சிறுபாணாற்றுப்படை  கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர், கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண்செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன.  கிடங்கால்  என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில்  திண்டிவனம்  இப்போது சிறந்து திகழ்கின்றது. படைவீடு     அரசனுக்குரிய படைகள் அமைந்த இடம் படைவீடு எனப்படும். தமிழ்  நாட்டார் வீரத்தெய்வமாக வழிபடும் முருகன் ஆறு சிறந்த படை வீடுகளில் அமர்ந்து அருள் புரிகின்றான் என்பர். 1  நெல்லை நாட்டில் பாண்டியனுக்குரிய படை வீடு ஒன்று பொருநையாற்றின் கரையில் இருந்தது.  மணப்படை வீடு  என்பது அதன் பெய

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 85

Image
 அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         30 December 2022         No Comment ( குறிஞ்சி மலர்  84 தொடர்ச்சி ) குறிஞ்சி மலர், அத்தியாயம் 30 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று .        — திருவள்ளுவர் மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக் களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை; வீரமும் இல்லை. இன்றைய அரசியலில் நாகரிகமாகவும் அழுக்குப் படாமலும் நடக்கிற  மௌனமான போராட்டத்துக்குத்தான் தேர்தல்  என்று பெயர். மக்களுக்காக அரசர்கள் போட்டியிட்டுப் பகைத்து அடித்துக் கொண்ட போர், பழைய காலத்துப் போர்.  எவரோ சிலர் தேர்தலுக்கு நிற்க அவர்களுக்காக மக்கள் போட்டியிட்டுப் போரிடும் நாள் இது . பழைய போரில் இருந்ததைக் காட்டிலும் இந்த நாகரிகப் போரில் சூழ்ச்சிகளும், சூதுகளும், வஞ்சனைகளும், ப