Posts

Showing posts with the label கருப்பு

தமிழண்ணல் கருப்பும் கறுப்பும்!

Image
தமிழண்ணல் கருப்பும் கறுப்பும்! By dn First Published : 06 January 2013 01:15 AM IST புகைப்படங்கள் கருப்பு கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் "கருப்பு' என்பதே. கறுப்பு - சினம், வெறுப்பு. அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் "நிறம்' அன்று. சீற்றத்தால் கறுகறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற் பொருளாக அரிதிற் பயன்பட்டன. "கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம். உரிச்சொல் இலக்கணத்தில், ""... ... பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்'' (782) பயிலாதவை - அடிக்கடி பயன்படுத்தாத அருஞ்சொற்கள். அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற் பொருள்களையும் தருதல் பாவலர்க்கு இயல்பு. கருப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா...''...