Posts

Showing posts from November, 2021

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 17/17

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 December 2021         No Comment (தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க்   கிளர்ச்சி : 17/17   உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும் அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானை அயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின் உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானை உயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை       (81) தமிழ்நாட்டெல்லை நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லை தென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானை தென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில் இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானை எதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை    (82) முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ் சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானை சென்னை தமிழருக்கே சேரவேண்டின் ஆந்திரர்கள் முன்னித் தமதாக்க முயலுவதேன் அம்மானை முயலவே விட்டால்நாம் மூடராவோம் அம்மானை       (83) தனித்தமிழ்க்   கிளர்ச்சி அன்றுபோல் நம்தமிழர் ஆக்கங்கள் பலபெற்று என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டும் அம்மானை என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டின் தமிழர்க்கு இன்று

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 39

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 November 2021         No Comment ( அகல் விளக்கு – மு.வரதராசனார். 38. தொடர்ச்சி ) அகல்   விளக்கு அத்தியாயம் 15  தொடர்ச்சி திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி அங்கே போய் வருவதைக் கவனித்த என் தாய், “ இளம் பெண் – புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி போவது நல்லது அல்ல. எப்போதாவது ஒரு முறை போய்விட்டு வந்தால் போதும்”  என்றார். அதன்படியே நான் போவதைக் குறைத்துக் கொண்டேன். பாக்கியம் முன்னைவிட ஓய்வாக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். “இனிமேல் எனக்குக் க

முனைவர் இரெ. குமரனின் பிற நூலறிவையும் தரும் திருக்குறள்-சிறப்புரை : முனைவர் பா.சம்புலிங்கம்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 November 2021         No Comment திருக்குறள் – சிறப்புரை : முனைவர் இரெ. குமரன் முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள திருக்குறள்-சிறப்புரை என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும்.  குறளின் வரிகளுக்கேற்ற வகையில் பொருண்மைக்கேற்றவாறு பிற தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோளுடன் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரையுடன் 1330 குறளையும் ஆராய்ந்து எழுதியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும் . அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உரைகள் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் மேற்கோள் நூல்கள், குறள் முதற் குறிப்பு அகர நிரல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. “திருக்குறள் சிறப்புரை என்றது, திருக்குறளின் மெய்ப்பொருளைக் கண்டதாகாது மெய்ப்பொருள் காண்பதென்பது என்போன்றோர்க்கு எட்டாக் கனியே! எனினும் ‘ஆசைபற்றி அறையலுற்றேன்’, என்பதன்றி வேறில்லை.குறள் பொருள் கூறுந்தோறும் மேலொரு இலக்கியப்பொருள் நுகரும் சிறப்பினால் இது சிறப்புரையாயிற்று எனக் கொள்க.” என்கிறார் நூலாசிரியர்.  ஒவ்வொரு குறளுக்கும் தரப்பட்டுள்ள உரை வாசகர்களுக்க

ஈழத்துப் புதின இலக்கியம் – தொடர்ச்சி : மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 November 2021         No Comment (முன்னிதழ்த் தொடர்ச்சி ) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 9   அத்தியாயம்  4. புதினத் தொடர்ச்சி   3) 1930 ஆம் ஆண்டையடுத்து மீண்டும் எண்ணிக்கையில் அதிகமாகக் கற்பனைக் கதைகள் புதினம் என்ற பெயாில் வௌிவரத் தொடங்கின.  சமூக  நிலைமைகள் எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் வெறும்  கற்பனாரீதியில்  அமைந்த இவை குறிப்பிடத்தக்க நீளமும் உடையனவாயிருந்தன. மக்களிடையே  விருத்தியடைந்த  வாசிப்புப் பழக்கமும்,  தினசாி ப்  பத்திாிகையின்  தோற்றமும் இத்தகைய நூல்கள் தோன்ற வழிவகுத்தன எனலாம். இது தொடர்பாக  1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரகேசாி  பத்திாிகை  குறிப்பிடத்தக்கது .  ஆரம்பத்தில்  அதன் ஆசிாியராகவிருந்த  எச். நெல்லையா  இப்  பத்திாிகையில்  தொடர்ந்து கதைகளை எழுதினார். இவரது நூல்களாகச் சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி (1934), இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி (1938), காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமணி (1938) (1938), பிரதாபன் அல்லது மகாராட்டிர நாட்டு மங்கை (1941), சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1940) ஆகியவை வௌிவந்துள்ள