Posts

Showing posts from February, 2021

வேண்டா! வேண்டா! வேண்டா! – இளவல்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         09 February 2021         No Comment வேண்டா! வேண்டா! வேண்டா!   அறிவிலாரிடம் விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டா அன்பிலாரிடம் அன்பு காட் டி வெல்லத் துடிக்க வேண்டா ஆய்ந்து கண்ட முடிவைச் சொல்லக் கலங்கிட வேண்டா இனிய முறையில் எழுத அறியாரிடம் இயம்பிட வேண்டா இல்லை பண்பெனக் கொண்டோரை எதிர்கொள்ள வேண்டா ஈட்டியைச் சொல்லாகக் கொள்வோரை அணைக்க வேண்டா உண்மைஎனப் பட்டதை உரைக்கத் தயங்க வேண்டா உள்ளதைச் சொல்ல எதிர்ப்பிற்கு அஞ்ச வேண்டா உரையாற்றும் உரிமையைப் பறிப்பவரிடம் உரையாட வேண்டா உளறுவதே தொழிலாயின்  உறவாக்க வேண்டா கற்றதைப் பிறருக்குக் கற்பிப்பதைக் கைவிட வேண்டா தூற்றுவோரை உலகம் தூற்றும் ஆதலின் துவள வேண்டா பொல்லாங்கு நோக்கில் எழுதுநரைப் பொருட்படுத்த வேண்டா மயங்குவதுபோல் நடிப்பவர்களைத் தெளிவுபடுத்த வேண்டா மரை கழண்டவர்களுக்கு மறுமொழி அளிக்க வேண்டா –  இளவல்

மருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         09 February 2021         No Comment மருத்துவமனை மரணங்கள் கண்ணுக்குத் தெரியாத விவரங்களுக்குக் கவலைப்படவேண்டியிருக்கிறது மருத்துவமனை மரணங்கள் மன்னித்துவிடுங்கள் என்னால் முடிந்தவரை முயன்று விட்டேன் மருத்துவரின் ஒற்றை வார்த்தையில் உறவினர்களின் எத்தனை உழைப்பு முடங்கி இருக்கும் அறுவைப் பண்டுவத்திற்கு வாங்கிய கடனின் அழுத்தம் அடக்கச் செலவுக்கு எங்கே போவேன் என் வருத்தம் பணத்தைக் கொடுத்தால்தான் பிணத்தைக் கொடுப்பேன் என்று பிணக்கு பிணவறை வாசலில் பிணமாக நான் கண்ணுக்குத் தெரியாத உயிர் எப்போது போகும் என்று யாருக்கும் தெரிவதில்லை மருத்துவருக்கும் பிறகு எதற்கு இந்தப் பித்தலாட்டத்தனம் காவல்நிலைய மரணங்கள் கூடச் சட்டத்தின் கட்டுபாட்டுக்குள் விசாரணை வளையத்திற்குள் மருத்துவமனை மரணங்களில் மருமங்கள் மட்டும் மலையாய்க் குவிந்து கிடக்கின்றன சத்தியமாய்ப் புரியவில்லை சட்டத்தின் விடைதான் என்ன? முதியோர்களைத் துரத்தி விட்ட இன்றைய இளைய தலைமுறையினரின் நோயின் தீவிரம் முற்றிப் போகிறது ஆங்கில மருத்துவமா நம்மை ஆண்டு கொண்டிருந்தது பாட்டியை மட்டுமல்ல பாட்டி வைத்தியத்தையும் புறக்கணித