திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 18 May 2026 (திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? தமிழருக்கென ஒரு நாடு இல்லை. பலகோடி தமிழர் பிழைக்க வழிவகையின்றி அயல்நாடுகளுக்குச் சென்று அல்லல்படுகின்றனர். தம் தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் வளம்பெறச் செய்ய வாய்ப்பின்றி இடர்ப்படுகின்றனர். ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்! அயல்நாட்டார் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்திக்காரர் வந்து தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர் எவரும் எந்த இடத்திலும் குடியமர உரிமை உண்டென இந்திய அரசியல் சட்டம் செய்யப்பட்டுள்ளது. அதுகொண்டு தமிழ்நாட்டில் அவர்கள் நிலையாகக் குடியேறி, தொழில்கள் செய்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் கிடைக்கும் கனிமப்பொருள்கள் யாவும் வடநாட்டிற்கே கொண்டு செல்கின்றனர். வருவாய் மிகுந்த இரு...