Posts

Showing posts from October, 2023

பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         01 November 2023        அகரமுதல (பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்:  புற்றரைக் காட்சி –  தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் ஆவல் மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; பூங்கொடி வெருவுதல் புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி ‘இகுளை! இம்மகன் என்மேற் காதல்      60 மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன் யானிவண் செய்வது யாது’என. நடுங்கினள்; படிப்பகம் புகுதல் அல்லி வெருவி ஆங்குள படிப்பகம் அதனுட் புகுகென அரிவையைக் கடத்தித் தான்வெளிப் புறத்தே தனிமையில் நின்றனள், கோமகன் காமவுரை காமம் என்னுங் கடுவிட நாகம் செக்கர் மாலைத் தென்றலின் இசையால் பக்கம் நின்று படம்விரித் தாடித் தீண்டஅப் பெருமகன் சிறுகுணம் மேவி நீண்ட உயிர்ப்பொடும் நெருங்கி வருவோன் கனிமொழி அல்லியைக் கண்களில் நோக்கித் ‘தனிவெளி நின்றாய்! தந்திரம் அறிவேன். நனிஎழில் நங்கைஎன் காதல் நலத்தை உ

ஊரும் பேரும் 54 : இறையவரும் உறைவிடமும்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         28 October 2023        அகரமுதல ( ஊரும் பேரும் 53 : இரா.பி.சேது(ப்பிள்ளை): திருமேனியும் தலமும் – தொடர்ச்சி) ஊரும்   பேரும் இறையவரும் உறைவிடமு ம் இரு சுடர்      இந் நில வுலகிற்கு ஒளி தரும் சூரியனையும் சந்திரனையும் நெடுங் காலமாகத் தமிழகம் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துரைக்கு மிடத்து ஞாயிறு, திங்கள் என்னும் இரு சுடர்களையும் போற்றுதல் இதற்கொரு சான்றாகும். 1 பரிதி நியமம்     தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடல் பெற்றுள்ளது. நியமம் என்பது கோயில். 2  எனவே, பரிதி நியமம் என்பது சூரியன் கோயில் 3  ஆகும். பிற்காலத்தில் பரிதியப்பர் என்னும் பெயர் அக் கோயிற் பெருமானுக்கு அமைந்தது. பரிதியப்பர் கோயில் பருத்தியப்பர் கோயில் என மருவி, இப்பொழுது பருத்திச் செடியோடு தொடர்பு கொண்டுள்ளது. சூரியனார் கோயில்     இன்னும், திருவிடை மருதூருக்கு அருகே சூரியன் கோவில் ஒன்று உள்ளது. அது முதற் குலோத்துங்க சோழனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும். மூலத் தானத்தில் சூரியன் வடிவம் காணப்படுகின்றது. மற்றைய கிரகங்களும் தனித்தனி இடம் பெற்றுள்ளன. இக் கோயிலையுடைய

தமிழ் வளர்த்த நகரங்கள் 12. – அ. க. நவநீத கிருட்டிணன்: திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         27 October 2023        அகரமுதல t ( தமிழ் வளர்த்த நகரங்கள் 11. – அ. க. நவநீத கிருட்டிணன்:குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ் – தொடர்ச்சி ) 7. நெல்லையின் அமைப்பும் சிறப்பும் திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி தென்பாண்டி நாட்டிலுள்ள பழமையான திரு நகரங்களுள் ஒன்று திருநெல்வேலி. இதன் நெல்லை யென்றும் சொல்லுவர். திருநெல்வேலியென்ற பெயரே நெல்லை என்று மருவி வழங்குகிறது. நகரைச் சுற்றிலும் நெற்பயிர் நிறைந்த வயல்கள் வேலியெனச் சூழ்ந்திருப்பதால் நெல்வேலியென்று பெயர்பெற்றது. சிவபெருமான் எழுந்தருளிய சிறந்த தலமாதலின் திருநெல்வேலி யென்று சிறப்பிக்கப்பெற்றது. தென்பாண்டி நாட்டிலுள்ள பாடல்பெற்ற பழம்பதிகளுள் இதுவும் ஒன்றாகும்.  ‘திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி’ என்று திருஞானசம்பந்தர்  இந் நகரைப் பாராட்டி யருளினர். கோவிலும் விழாவும் பாண்டிய நாட்டை மதுரைமாநகரிலிருந்து அரசாண்ட கூன் பாண்டியன் காலமாகிய ஏழாம் நூற்றாண்டிலேயே திருநெல்வேலி பெருமையுற்று விளங்கிய திருநகரமாகும். அதனலேயே திருஞானசம்பந்தர் இக் நகருக்கு எழுந்தருளிய நாளில் அப் பாண்டியன் தன் தேவியாகிய மங்கைய