தமிழ்நாடும் மொழியும் 21: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
அகரமுதல ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 03 January 2023 No Comment (தமிழ்நாடும் மொழியும் 20 தொடர்ச்சி ) தமிழ்நாடும் மொழியும் 21 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும் . முதல் இராசராசன் (985-1014) சோழப் பேரரசுக்கு அடிப்படைக்கல் நாட்டியவன் விசயாலயன். கட்டடத்தை எழுப்பியவன் பராந்தகன் . அந்தக் கட்டடத்தின் பெருமையை உலகுக்குத் தெரிவித்தவர்களுள் தலை சிறந்தவன் இராசராசன். இராசராசன் காலத்தில் சோழப் பேரரசு பேரும் சீரும் பெற்றது. சோழ நாட்டுக் கொடி யாங்கணும் பறந்தது. அவன் படை என்றாலே அகில உலகும் கிடுகிடுத்...