Posts

Showing posts from July, 2014

மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்

Image
மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      27 சூலை 2014       கருத்திற்காக.. (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே! -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன? தலைவனை அடைவதே. தலைவன் இவளையடைந்து மணம் நிகழ்த்தல் வேண்டும். அல்லது தலைவி தலைவனிடத்திற்குச் சென்று மணக்குமாறு செய்தல் வேண்டும் ஒரு பெண் தன் காதல் மிகுதியால் காதலனை நாடிச்செல்லுதல் மிக அருமை. தன் காதலனை அடைய முடியாத நிலைகள் வீட்டில் ஏற்படுத்தப்படுமாயின், அஃதாவது வேறு ஆடவனுக்கு மணம் செய்து கொடுப்பதற்குப் பெற்றோர் முயல்வரேல், அப்பொழுது தலைவி தலைவன் இடத்தைத் தானே நாடிச்செல்வதால்

நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன்

Image
நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 4 : ச.பாலமுருகன் இலக்குவனார் திருவள்ளுவன்      27 சூலை 2014       கருத்திற்காக.. (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) அரசை வலியுறுத்தவேண்டியவை: மாவட்ட வாரியான நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு- பேணுகை ஆகிய பணிகள் பற்றிய அறிக்கை அனுப்புதல். மாவட்ட அளவில் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரசாங்கம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் மாவட்ட தோறும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் அதில் பாழடைந்து சீரழிந்து வரும் நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் தனித்தனியே தொகுத்து அதில் மேற்கொள்ளவேண்டிய பேணுகை, பாதுகாப்பு ஆகிய பணிகள் பற்றிய குறிப்புரை தயார் செய்து தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர், அரசு செயலர், தலைமைச் செயலர் ஆகியவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரவேண்டும். நடுகற்கள், பிற நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க தேவைப்படும் நிதிச் செலவினங்களுக்கு அரசின் நிதி உதவி கோரவேண்டும்.   2.நடுகற்கள்/மரபுச்சி

செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி

Image
செஞ்சீனா சென்றுவந்தேன் 6 – பொறி.க.அருணபாரதி இலக்குவனார் திருவள்ளுவன்      27 சூலை 2014       கருத்திற்காக.. (ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) 6.சீன ‘வளர்ச்சி’யின் உண்மை நிலை என்ன?   சீனாவிற்குள் நுழைந்தவுடன் என்னிடம் எனது அலுவலகப் பணியாளர்கள் கடவுச்சீட்டைக் கேட்டார்கள். அதை அருகிலுள்ள காவல் நிலையத்தில் அளித்து, தற்காலிக குடியிருப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றார்கள். அதற்கென உள்ள விண்ணப்பப் படிவத்தில், சீன மொழியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு சீன மொழியிலேயே என்னிடம் கேட்டு விடை எழுதினர். தங்குமிடம், எவ்வளவு நாள் வரை தங்குவோம் முதலான தகவல்கள் அதில் கேட்கப்பட்டிருந்தன.   சீன நகரங்களில் குடியிருப்பதற்கு, வெளி நாட்டவர் மட்டுமின்றி உள்நாட்டவர்கள் கூட, இவ்வாறான தற்காலிக இசைவுச் சீட்டு பெற வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டிலிருந்து இவ்விதி செயல்படுத்தப் படுகின்றது.   1970களின் பிற்பகுதியில் மாவோ காலவட்டம் முடியும்வரை, சீனாவில் வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. 1980களுக்கு முற்