Posts

Showing posts with the label பெண்

சுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி

Image
அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      18 சூன் 2017       கருத்திற்காக.. சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 17 பெண்மகளும் பெட்டகமும்   வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும் தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப் பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே ! வெல்மகளும் பெட்டகமாய் வீடு.  பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர். 2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் . 3) தூய்மையாக இருப்பார்கள். 4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர். 5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்று பல நிலைகள் கொண்டிருப்பர். பெட்டகம்: 1 எந்நேரமும் மூடியே இருக்கும். 2 வாய்(கதவைத் ) திறந்தால் உள்ளிருக்கும் அரும்பொருள் காட்டும் 3 . தூய்மையான ஆடைகளை உள்ளே வைத்திருக்கும். 4) உள்ளிருக்கும் பொருட்களைத் தாங்கும் . 5) பல அடுக்குகளைப் பெற்றிருக்கும். ...

சுந்தரச் சிலேடைகள் 15. தாமரையும் பெண்ணும் – ஒ.சுந்தரமூர்த்தி

Image
அகரமுதல 18 9, வைகாசி 21, 2048 / சூன் 04 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      04 சூன் 2017       கருத்திற்காக.. சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 15 தாமரையும் பெண்ணும் கூம்பி  விரிதலால், கூடை சுமத்தலால், தேம்பி அழுதலால் , தேனடையாம் – தாம்பதற்கும் வாசம் பலதந்து வாழ்வில் சிறக்கின்ற நேசமிவள்  தாமரைக்கு ஒப்பு . பொருள் தாமரை   இரவில் கூம்பிப் பகலில் விரியும். 2 )  தாமரை மலர்களைப் பறித்து விற்பனைக்குக் கூடைகளில் கொண்டு செல்வர் . 3 ) அலைகளின் மோதலால் தாமரை அசைவது தேம்புவது போன்றும், மலரில் அலைநீர் பட்டு வழிவது அதன் கண்ணீர் போன்றும் தோன்றும் . 4 )  பூவிதழ் திறக்கத் தேனிருக்கும் . 5 )  தன்னைக் கட்டியிருக்கின்ற நாருக்குக் கூட மணத்தை , வாசத்தைத் தரும் . பெண் 1)  ஊடலில் கூம்பிக் கூடலில் விரியும் முகத்தைப் பெண் பெற்றிருப்பான் . 2)  பெண்கள் கூடைகளில் பொருட்கள் சுமப்பர் . 3 )  துயரில் தேம்பி அழுவார்கள்:  கண்களில் கண்ணீர் வருகிறது. 4)...