Posts

Showing posts from April, 2023

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32- மகமதியரும் கிருத்துவரும்

Image
  ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         29 April 2023        அகரமுதல ( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31. தொடர்ச்சி)                    ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 மகமதியரும் கிரு த்துவரும் வாலாசா     தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாசா என்னும் பெயரும் உண்டு. அப் பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாசாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம் சில காலம் சிறந்து விளங்குவதாயிற்று.     இன்னும், உடையார் பாளையத்திலுள்ள வாலாசா நகரமும், பாலாற்றங்கரையிலுள்ள வாலாசாபாத்து  என்னும் ஊரும் முகம்மது அலியின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.      வாலாசா பேட்டைக்கு அருகேயுள்ள இராணிப்பேட்டையின் வரலாறு அறியத் தக்கதாகும். செஞ்சிக் கோட்டையில் தேசிங்குராசன் என்னும் வீரன் சிறந்து விளங்கினான். மகமதிய நவாபாகிய சாதுல்லாகான் என்பவன் அக் கோட்டையின்மீது

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         28 April 2023        அகரமுதல ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35 தொடர்ச்சி ) ‘பழந்தமிழ்’  36 8.  பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி   இன்றுள்ள இந்திய மொழிகளுள்  ஆரியம் ஒழிந்த பிறவெல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியங்களைப் பெற்றுள்ளன.   வட இந்திய மொழிகள் எனப்படுவன அசாம் மொழி, வங்காள மொழி, குசராத்தி மொழி, காசுமீரி மொழி, இந்தி மொழி, மராத்தி மொழி, ஒரியா மொழி, பஞ்சாபி மொழி, உருது மொழி என ஒன்பதாம்.    அசாம் மொழியில் இலக்கியம் என்று கூறத்தக்கதாய்த் தோன்றியது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் .   வங்காள மொழி  இருபதாம் நூற்றாண்டில் சிறந்த முறையில் பல்வகைப் பகுதிகளிலும் வளர்ச்சியுற்றிருந்த போதிலும், நமக்கு இன்று கிடைத்துள்ள  முதல் கையெழுத்தேடு கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும்.   குசராத்தி மொழி தன் மூலமொழியான அபப்பிரம்ச மொழியின் தொடர்பற்றுத் தனிமொழியாக உருவெடுத்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்தான் , அது உரையிலும் பாட்டிலும் இலக்கிய வளம்பெறத் தொடங்கியது கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான்.   காசுமீரி மொழியில் இயற்ற

தமிழ்நாடும் மொழியும் 36: செந்தமிழும் கொடுந்தமிழும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

Image
  ஃஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         27 April 2023        அகரமுதல ( தமிழ்நாடும் மொ ழியும் 35:  தமிழின்தொன்மையும்சிறப்பும்  – தொடர்ச்சி ) 2.  செந்தமிழும்   கொடுந்தமிழும் செ ந்தமிழ் என்றால் என்ன? கொடுந்தமிழ் என்றால் என்ன? அவைவழங்கும் நாடுகள் யாவை? தமிழை இவ்வாறு பிரிப்பது முறையா? முதலில் யார் இப்பிரிவினைக் குறித்தது? இதுபற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்? என்பனவற்றை அடுத்து ஆராய்வோம். இன்று நின்று நிலவும் தமிழ் நூற்களில் தொன்மையான நூலெது? தொல்காப்பியம் என்க. அதிலே செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு காணப்படுகிறதா? இல்லை. ஆனால்  முதன் முதலில் இப்பிரிவு நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலே காணப்படுகிறது . “ செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியில் ” என்பது சிலப்பதிகார வரியாகும். இது தவிர வேறு நூற்களிலே இப்பிரிவு கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பிரிவை வளர்த்துப் பெரிதாக்கி வாதமிட்டவர்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களே. “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” என்ற நூற் பாவிற்கு உரையாசிரியர்கள் கூறிய உரைப்பகுதி வருமாறு : “செந்தமிழ் ஒன்று; அதனைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1

Image
  ஃஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         26 April 2023        அகரமுதல (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 5 தொடர்ச்சி) களம்  : 5  காட்சி  : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 :            மண்ணாள்               வேந்தன்                  குலக்கொடிக்கு                                       மறவா           வண்ணம்                 யாப்புரைக்க                              எண்ணி                   யழைத்தார்               சூதாக                                       இளமைப்                பருவந்          தோதாக                              பெண்ணாள்              கவியின்                  தமிழாலே                                       பிணையல்               கொண்டாள்              அன்பாலே                              நண்ணும்                 அவையில்                இற்றைநாள்                                       நல்ல                      முடிவைக்                காண்குவமோ முதியோன் 2:  உற்றவ          ரென்று          நெருங்காமல்