Posts

Showing posts from May, 2024

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார் : 04. உள்ளுறை உவமம்

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         17 May 2024        அகரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 03. என் தமிழ்ப்பணி- தொடர்ச்சி ) என் தமிழ்ப்பணி அத்தியாயம்  2.  உள்ளுறை   உவமம் உவமை இரண்டு வகைப்படும்: அறியாத ஒரு பொருளை விளக்க அறிந்த ஒரு பொருளை எடுத்துக்காட்டி இதுபோல் இருக்கும் அது எனக் கூறுவது ஒன்று. இது  உலக வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் வரும் . இது ஏனை உவமம் என்றும் அழைக்கப்படும். எவ்வித அடையும் இல்லாமல் வறிதே உவமம் என்றும் அழைக்கப்படும். மற்றொன்று செய்யுளில் மட்டுமே வருவது; அதுவே  உள்ளுறை உவமம்; உவமப்போலி  என்றும் அழைக்கப் பெறும், ஆடவர்க்குரிய் இலக்கணம் அனைத்தையும் குறைவறப் பெற்ற ஒர் ஆண்மகனும். பெண்டிர்க்குரிய இலக்கணம் அனைத்தையும் குறைவறப்பெற்ற ஒரு பெண் மகளும் காதலால் ஒன்றுபட்டுக் கருத்து ஒருமித்த உயர்ந்த இல்வாழ்க்கை நடாத்தும் நிலையில் ஒருவரோடு ஒருவர் சொல்லாடும்போது  பலரும் அறிய வெளிப்படையாகக் கூறத் தகாத சில எண்ணங்களை நாகரீகமாக மறைத்துக் கூற, புலவர்கள் கையாளும் முறையே உள்ளுறை உவமம்.  அகத்திணைப் பொருள்களுள் தெய்வம் நீக்கிய ஏனைய கருப்பொருள்களின் இயல்புகளையும் செயல்க

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         15 May 2024        அகரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் நிலைமை `குலக்கொடி இன்னுங் கூறுவென் கேட்டி! கலக்குறு நெஞ்சினன் காமம் விஞ்சிய கோமகன் சிலரொடு குழுமி ஆங்கண் 30 பாமக னாகிய பாவலன் பெயரால் படிப்பகம் நிறுவிப் பணிபூண் டொழுகினன்; உடைப்பெருஞ் செல்வன் ஆதலின் ஊரார் தடைக்கல் இட்டிலர்; தமிழின் பெருமை முடுக்குகள் தோறும் முழங்குதல் கண்டேன்’ 35 எனுஞ்சொற் கேட்டுளம் எழுச்சி கூர்ந்து மனங்கொளும் மகிழ்வின் வாழ்த்தினள் பூங்கொடி; பொதுப்பணி வேடர் `இருஇரு செல்வி! இளையோன், தமிழ்க்குப் புரிபணி உளத்தில் பூத்த தன்றே! தந்நலம் வேண்டும் தணியா ஆர்வலர் 40 பொதுநலம் புரிவோர் போலப் பேசுவர்; மதுநலங் கண்ட வண்டென மக்களும் மதிமயக் குற்று வாழ்த்தொலி எழுப்புவர்; புதுநிலை எய்துவர் புகழ்பொது மக்களால்; மேனிலை எய்தலும் மிதிப்பர்அம் மாந்தரை; 45 நானிலம் இவ்வணம் நடந்திடல் கண்டோம்; கோமகன் வஞ்சகப் பணி இளையோன் றானும் இவ்வழி செல்லும் உளமே உடையோன், தன்னலம் ஒன்றே குறியா வைத்துக் குழைந்து பொதுப்பணி புரிவோன் ஆயினன், பூ

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 15 : வீரக்கல்

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         11 May 2024        அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்-தொடர்ச்சி) தமிழர் வீரம் வீரக்கல் வீரரை வியந்து போற்றிய நாடு தமிழ்நாடு. போர் முனையில் விழுப்புண் பட்டு விழுந்தவர்க்கும்,  கடும்புலியைத் தாக்கி வென்ற காளையர்க்கும், இன்னோரன்ன வீரம் விளைத்தவர்க்கும் வீரக்கல் நாட்டிச் சிறப்பைச் செய்தனர் தமிழ்நாட் டார். நடுகல் வீரருக்கு நாட்டுதற்கேற்ற கல்லை முதலில் தேர்ந்தெடுப்பர்; எடுத்த கல்லைப் புனித நீராட்டுவர்; வீரனுடைய பீடும் பேரும் அதில் எழுதுவர்; உரிய இடத்தில் அதனை நாட்டுவர்; மாலையும் மயிற் பீலியும் சூட்டுவர். இவ்வாறு நட்ட கல்லைத் தெய்வமாகக் கொண்டு வணங்குதலும் உண்டு. [1] பத்தினிக் கோயில் மதுரை மாநகரில் கற்பென்னும் திண்மையால் வீரம் விளைத்தாள்  கண்ணகி . அப்பெருமாட்டியை “மாபெரும் பத்தினி” என்றும், “வீர பத்தினி” என்றும் வியந்து புகழ்ந்தது தமிழுலகம். [2]  சேர நாட்டை யாண்ட  செங்குட்டுவன்  என்னும் வீர மன்னன் அதையறிந்து விம்மிதமுற்றான்; வீரருக்குரிய சிறப்புகளை அக் கற்பரசிக்குச் செய்ய முற்பட்டான்; [3]  மலைகளில் உயர்ந்த இமய மலையிற் ச

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         08 May 2024        அகரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி) பூங்கொடி அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை குறளுரை பரப்புதல் நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின் சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்கு உணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்; கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர், இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5 தாமரைக்கண்ணி வருகை தாமரைக் கண்ணி தந்தனள் வருகை; காமரு பூங்கொடி கடிதின் எழீஇத் தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇ நீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழி கூறா நின்றனள்; கூறிய நங்கையை 10 ஆரத் தழுவி அப்பெரு மாட்டி வீரத் திருமகள் வாழிய என்றனள்; பூங்கொடி வினவல் `ஊரில் புதுமை உற்ற துண்டுகொல்? அன்னையும் தோழியும் என்பிரி வாற்றி நன்னல மோடவர் துன்னினர் கொல்லோ? 15 உரையாய் தாயே’ என்னலும் `உன்னைத் தாமரைக்கண்ணி மறுமொழி அருண்மொழி நிலைமை திரைவாய்க் கடல்நகர் திருத்துவான் வேண்டித் தனியே விடுத்ததால் தையலர் இயல்பான் நனிகலங் கினர்பின் நலிவு துடைத்துச் செந்தமிழ் காக்க வந்தவள் என்மகள், 20 எந்த இடும்பையும் ஏற்றிட வல்லாள், பகைஎ

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 14 : வீர மாதர்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         04 May 2024        அகரமுதல ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 13 : வீர விளையாட்டு-தொடர்ச்சி) தமிழர் வீரம் வீர மாதர் வீரத் தாய் தமிழ் நாட்டில் பெண்களும் மனத்திண்மை உடைய வராய் விளங்கினார்கள்; தன் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத் தாயர் பலர் தமிழ் நாட்டில் இருந்தனர். வாளெடுத்த தாய் வயது முதிர்ந்து, வற்றி உலர்ந்து, தள்ளாத நிலையில் இருந்தாள் ஒரு தாய். அவள் மகன் போர் புரியச் சென்றான். அவன் வெற்றி பெற்று வருவான் என்று எண்ணி எண்ணி, அவள் உள்ளம் தழைத்திருந்தாள். நாள்தோறும் மாலைப் பொழுதில் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஒளியிழந்த கண்களால் அவன் வரும் வழியை நோக்கியிருந்தாள். ஒரு நாள் அவள் அடிவயிற்றில் இடி விழுந்தாற்போல், “உன் மகன் பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடினான்” என்று சிலர் சொல்லக் கேட்டாள்; உடனே வீராவேசமுற்று எழுந்தாள்; வீட்டினுள்ளே ஓடினாள்; ஓர் அரிவாளை எடுத்தாள்; அதனைக் கையிற் பிடித்துக்கொண்டு போர்க்களத்தை நோ