தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. அ. வள்ளலாரும் சீர்திருத்தமும்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 05 October 2023 அகரமுதல (தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும் – தொடர்ச்சி ) 3. வள்ளலாரும் சீர்திருத்தமும் [இராமலிங்க சுவாமிகள் சமாச சார்பில் நிகழ்ந்த வள்ள லார் பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை. திருவொற்றியூர்] சகோதரிகளே! சகோதரர்களே!! யான் இப்பொழுது பல அழைப்புகளை மறுத்து வருகிறேன். ஆனால் இந்த இராமலிங்க சுவாமிகள் சமாசத்தார் அழைப்புக்கு மட்டும் இணங்கினேன். இச் சமாசம் காலஞ்சென்ற தலைவர் கா . இரா . நமச்சிவாய முதலியாரின் உடன் பிறந்தார் திரு . கா . இரா . மாணிக்க முதலியார் தலைமையில் நடைபெறுவது. இத்தலைமை என்னை இணங்கச் செய்தது. திரு. சாமராச முதலியார் புதல்வர் இராமலிங்கம், திரு. கந்தசாமி முதலியார் புதல்வர் இராமலிங்கம் ஆகிய இரண்டு இராமலிங்கங்களின் இளமை என்னை இத்தொண்டாற்ற ஒருப்படச் செய்தது. இளமையில் எனக்குத் தணியாக் காதல் உண்டு. இராமலிங்க அடிகளின்...