Posts

Showing posts from April, 2026

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும்

Image
  ஃஃஃ   அகரமுதல         இலக்குவனார் திருவள்ளுவன்         26 April 2026         (திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்    தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத் தக்க இடமளிக்கப்படவில்லை. ஏன்? தமிழ்நாட்டில் வாழும் தமிழர்க்கு தமிழ்ப்பற்றும், நல்ல தமிழறிவும் இல்லையென்றால் மிகையன்று. இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிக்க வேண்டுமென்று முதலில் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தவர் பொட்...

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன?

Image
    ஃஃஃ    அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன்         19 April 2026         ( திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  :  ௪.  எழுக தமிழினமே!- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். மதுக்கடைகளை அகற்றக் கோரி மதுக்கடைகள் முன் மறியல் ஆர்ப்பாட்டம் செய்தல். உப்புக் காய்ச்சுதல், உப்பெடுத்தல், வரிகொடாப் போராட்டம் நடத்தல். சட்டப்படி காவிரிநீர் கொடாமலும், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் முன் திருவள்ளுவர் உருவச்சிலை வைக்கக் கூடாதென மறுத்து கருநாடகம் வாழ் தமிழ்களைப் படுகொலை செய்து வெருட்டியடித்த கருநாடக அரசுடன் எத்தகு அரசியல் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் தமிழக அரசை வற்புறுத்தல். தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம் வெளியேற்றுமாறும், இனி, எவரையும் தமிழ்நாட்டில் குடியமர்த்தக் கூடாதென்று புரட்சி செய்தல். தாழ்த்தப்பட்ட மக்களை மேல்மட்டத்தார் வாழும் இடங்களிலும் கோவில்களிலும் குடியிருக்கச் ச...

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௪. எழுக தமிழினமே!

Image
ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         12 April 2026         அகரமுதல  (திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ௩.  திராவிட நாடும் தேர்தலும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு ௪.  எழுக தமிழினமே! தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அயல் மாநிலத்தார் பறித்துக் கொண்டன போக எஞ்சியுள்ள குறுகிய தமிழகத்தையும் அண்டையிலுள்ள கேரளம், கன்னடம், தெலுங்கம் மாநிலத்தார் தமிழ்நாட்டில் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளைத் தங்களுக்கு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் தமிழுக்கே உரிய இடம் அளிக்கப்படாத போழ்து, சிறுபான்மையினராக வாழும் அயல் மாநிலத்தார் தங்கள் மொழிகளையும் பயிற்று மொழிகளாக்க முயல்கின்றனர். பெயரளவில் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் சமற்கிருத மொழியையும் ஒரு பாடமொழியாக்க வேண்டுமென்று இந்திய நடுவணரசு முயல்கின்றது. இந்தி மொழி பெரும்பாலும் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டுவிட்டது. தமிழக ஆளுநர் சன்னாரெட்டி இந்தி படித்த தமிழ்நாட்டாருக்கு பட்டச்சான்று வழங்கியஞான்று தேசிய ஒருமை...