Posts

Showing posts from January, 2019

வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 சனவரி 2019         கருத்திற்காக.. முனைவர் கு.மோகன்ராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) முனைவர் வாணி அறிவாளன்    திருக்குறள் ஆய்வு, திருக்குறளைப் பரப்புதல், திருக்குறளை வாழ்வியலாக்குதல் எனத் தம் வாழ்வினைத் திருக்குறள் சார்ந்த நற்பணிகளுக்காகவே ஒப்படைத்துக்கொண்டவர், திருக்குறள் மாமுனிவர் திரு.கு.மோகனராசு அவர்கள். அவர் தம் வாழ்க்கை வரலாற்றை 20 தொகுதிகளாக வெளியிடவேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை வாழ்க்கைச் சுவடுகள் என்ற பெயரில் வெளியிட்டுவருகிறார். அவர்தம் குழந்தைப் பருவ வாழ்க்கையை வாழ்க்கைச் சுவடுகள்–1: குழந்தைப் பருவம் என 2013இல் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக ‘வாழ்க்கைச் சுவடுகள் – பகுதி 6 எனும் இந்நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் தன்வரலாற்று நூலில், அன்னார் 01-08-1973  அன்று சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வுப்பகுதியில் ஆராய்ச்சித் துணைவராகச் சேர்ந்தது முதல்  31-12-1973 முடிய ஐந்து திங்களில் தான் ஆற்றிய பணிகள் பற்றிய வரலாற்றினைத் தொகுத்தளித்துள்ளார்.        திருக்குறள் மாமுனிவரான பேரா.கு.மோகனராசு அவர்கள், சாதி

பொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         16 சனவரி 2019         கருத்திற்காக .. பொங்கல் புத்தாண்டு வாழ்த்து பூத்தது புத்தாண்டு பொங்கல் திருநாளில் போயிற்று ஓராண்டு                                         பொன்னான வாழ்நாளில் சென்ற ஓராண்டில் செய்தோமா நற்பணிகள் என்றே சிந்திப்போம் ஏற்போம் தவறுகளை இன்றிந்த புத்தாண்டில் ஏற்றமுடன் நற்பணிகள் சாதிக்கச் சிந்திப்போம் சாதனைகள் செய்திடுவோம் பொங்கல் திருநாளில் அகமெனும் பானையில் அன்பெனும் நீரூற்றி அறிவெனும் அரிசியிட்டு பாசமெனும் பாலூற்றி நேசக் கரங்களினால் நேர்மை நெருப்பேற்றி தீந்தமிழ்த் தேனூற்றி தித்திக்கும் பொங்கலிட்டு ஒற்றுமை உணர்வுபொங்க உற்ற உறவினராய் நற்றமிழ்ப் பற்றோடு பொங்கலோ பொங்கலெனப் பொங்கலிட்டு வாழியவே! முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ

ஊட்டல் விரும்புவரோ? -முனைவர் க.தமிழமல்லன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         16 சனவரி 2019         கருத்திற்காக.. ஊட்டல் விரும்புவரோ? இடுப்பொடியத் துணிதுவைத்தால் இடைமுரிந்து போகுமென்றே எளிதாகச் சலவைசெய்ய எந்திரங்கள் வாங்கிவிட்டார்! அடுப்பருகில் நின்றுபுகை அணைக்காமல் ஆக்குதற்கும் ஆவியினைப் பெற்றுவிட்டார்! அப்புகையைப் போக்குதற்கும்  அடுப்பின்மேல் புகைபோக்கி அமைத்துவிட்டார், போதாவா? அம்மியிலே அரைக்காமல் கலக்கிகளை வாங்கிவந்தார்! கடுப்பின்றிக் கைகால்கள் வலிக்காமல் மாவரைப்பார்!  கண்ணான தாய்மார்கள் கசங்காத உடையோடு! என்றாலும் கறிச்சோற்றை இளம்பெண்கள் ஆக்குங்கால்,  என்றேனும் மீக்குழம்பைச் செய்யுங்கால், உப்புகாரம்,  நன்றாகச் சேர்வதில்லை! நாவிற்கே ஏமாற்றம்!  நாவினிக்க உணவகத்தின் சுவையென்றும் வாராது!  மென்றுமென்று தின்றாலும் சுவைமேன்மை இல்லையடா !  மெல்லமெல்லக் கிழமைக்கோர் நாள்ஆக்கும் பணிவிடுத்தார்! மெல்லியர்கள் நெஞ்சினிலே உணவகத்தின் எண்ணமடா  மேலென்றே உணவகத்தில் உண்டுவிடச் சென்றிடுவார்!  உணவாக்கும் நற்பணியால் உளம்விரியும் மகளிர்க்கே!  உலைவைத்துச் சோறாக்கி உள்ளன்பால் அளிக்குங்கால்,  மணக்கின்ற மீன்குழம்பும் மனங்கவரும் மிளகுநீ

கண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         14 சனவரி 2019         கருத்திற்காக..    கண்ணீர்ப் பொங்கல்! துளைக்க   வரும்   துப்பாக்கிக்   குண்டு   கண்டும்        துணிந்தெதிர்த்தார்   அஞ்சவிலை   ஈழ   நாட்டார் வளைக்கவரும்   படைகண்டும்   கலங்க   வில்லை        வரிப்புலியாய்ப்   பாய்ந்தெதிர்த்து   வாகை   கொண்டார் அழைத்தபடை   அரவணைக்கும்   என்று   நின்றார் ;        அமைதியெனும்   பெயராலே   குண்டு   வீசித் தொலைக்கவரும்   நிலைகண்டே   மயங்கு   கின்றார் ;        தோழமையே   பகையானால்   என்ன   செய்வார் ? சிங்களத்துக்   கொடுங்கோலால்   அடிமை   யாகிச்        சிக்குண்டு   நலிந்துருகிப்   பின்நி   மிர்ந்து வெங்களத்தில்   வரும்விடியல்   எனநி   னைந்து        வேங்கையெனச்   சினந்தெழுந்து   போர்தொ   டுத்தார் தங்குலத்தோர்   விழியிழந்தும்   உயிரி   ழந்தும்        தையலர்தம்   கற்பிழந்தும்   தயங்கா   ராகித் தங்குறிக்கோள்   வெற்றிபெறும்   வேளை   யிற்றான்         தடையாகிப்   பாரதமே   நின்ற   தம்மா ! இனப்பகையை   எதிர்ப்பானா ?  அமைதி   பேசி        எழும்பகையை   எதிர்ப்பானா ?  ஈழ   நாட்டான் தனித்துலகில்   நி