திருக்குறள் Thirukkural 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
செம்பாகம் அன்று பெரிது.
( குறள் எண் : 1092 )
மு.வ : கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.
சாலமன் பாப்பையா : நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.
| The furtive glance, that gleams one instant bright, Is more than half of love’s supreme delight. |
( Kural No : 1092 ) |
Kural Explanation: A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).
| |
Comments
Post a Comment