௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் – திருத்துறைக்கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 22 September 2025 அ கரமுதல (அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் வரலாற்று அறிஞர்கள், ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக இந்தியாவிலுள்ள செழிப்பான சிந்துசமவெளியில் புகுந்தார்கள் என வரலாறு எழுதியுள்ளனர். இன்றுள்ள ஆரியக் குஞ்சுகள், ஆரியர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்ததை எவன் கூரை மீதிருந்து பார்த்தான் என்றும், பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்த ஆங்கிலேயர் ஆரியர், திராவிடர் என்று பிரித்து வரலாறு எழுதிவிட்டனர் என்றும், தாங்கள் நடத்தும் ஆங்கிலம், தமிழ் நாளேடுகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். 17.12.1994 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் எக்சுபிரசு” என்னும் ஆங்கில நாளேட்டில் டாக்டர் எசு.குப்தா என்பவர் ஆரியர் இந்தியக்குடி மக்களே! வந்தேறிகள் அல்லர், என ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஏ...