Posts

Showing posts from May, 2025

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 96: ஒருதலைக் காமம்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         21 May 2025         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி) பூங்கொடி           எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன்,               அருளறம் பூண்டது குறளகம், ஆதலின்   290           தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்;  ஒருதலைக் காமம்           நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும் பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி ஆடவர் திரியின் யானென் செய்வல்?     —————————————————————           முரணினர் – மாறுபட்டனர், உரி – தோல் ஆடை, கான் – காடு, எழூஉம் – எழும், விழாஅது...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும் வழி

Image
ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         14 May 2025         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியை அடையும்வழி           `வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள் பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி                   ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில்    235 —————————————————————           எய்யாது – சளைக்காமல், ஒய் – விரைவுக்குறிப்பு. ஒல்கா – அடங்காத, கனல – எரிக்க. ++++++++++++++++++++++++++++++++++++++++           குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு, பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி நழுவா வகையில் நயந்துரை மொழிந்திடு, அழகிய அவளுடல் ஆடவன் நினக்கு  ...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 28: புலவர் கா.கோவிந்தன் : அசோகனும் தமிழ்நாடும்

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         09 May 2025         அ கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு     27: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்-தொடர்ச்சி) ஆரியர்க்கு   முற்பட்ட   தமிழ்ப்பண்பாடு  . . . .  அசோகனும் தமிழ்நாடும் ஆனால், அசோக வருத்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும் மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும் , அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, கேரள புத்திரர்களை “அந்த” அஃதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13ஆவது கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தரும விசயத்தில் வெற்றி கொண்டதாகக் கூறுகிறான். உலகிற்கு உபதேசிப்பதில் அவன் பெருமகிழ்வு கண்ட, பிராமண, சமண, பெளத்த சமயப் பேராசிரியர்கள் வழங்கும் அறிவுரைகளின் ஒன்றுபட்ட தொகுப்புத் ...

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?

Image
ஃஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         08 May 2025         அ கரமுதல (திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் க௪. தமிழுக்குச் சிறை? இன்று வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கள் பயன்படுத்தும் சொற்கள் தமிழ்ச்சொற்களா? வேற்றுமொழிச் சொற்களா? எனத் தெரியாது . ஏனெனில், இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆரியம் புகுந்து, தன் மொழி சமற்கிருதத்தைத் தமிழுடன் கலந்து எழுதி, தமிழும், வடமொழியும் (சமற்கிருதம்) கடவுளின் (சிவனின்) இருவிழிகள் என்றும் சமற்கிருதம் “தேவபாசை” என்றும் கதைகட்டி விட்டனர். இதுகொண்டு தமிழ்மக்கள் மயங்கி தமிழ்ச் சொற்களை விட்டு வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலக்கத் தொடங்கினர். இதனையறிந்த ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர், ‘வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாக் கும்மே’ என்று ஒரு நூற்பாவழி சிறு கட்டுப்பாடு விதித்தார். இவ்விதியைப் பின்பற்றி நூல் யாத்தவர் கம்பரும் வில்லிபுத்தூராருமாவர். இருப்பினும், தமிழர் மயக்கந்தீரவில்ல...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         07 May 2025         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 93: கோமகன் நிகழ்ந்தன கூறல்-தொடர்ச்சி) பூங்கொடி வஞ்சியின் எழுச்சியுரை           கருதிய காதற் களந்தனில் நீதான்           ஒருமுறை இறங்கினை, திரும்பினை வறிதே! 180           காதல் எளிதெனக் கருதினை போலும் சாதல் எய்தினும் சலியா துழைப்பின் விரும்பிய வெற்றி அரும்புவ துறுதி; நால்வகை முயற்சியும் நயவா தொருமுறை             தோல்வி கண்டுளம் தொய்ந்தனை யாயின்    185           ஆண்மை என்றதை அறைதலும் உண்டோ? நாண்மடம் பூண்ட நங்கையர் தம்மனம் எளிதாய் இசைந்திடின் பெண்மையும் ஏது? மறுத்தும் வெறுத்தும் மாறியும் சீறியும்            தடுத்தும் உரைப்...

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 27: புலவர் கா.கோவிந்தன்: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         02 May 2025         அ கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    26 : சேர, சோழ, பாண்டிய அரசுகள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு . . . .        கி.மு. நான்காம் நூற்றாண்டில், வட இந்தியாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது. இது குறித்துக்  கெளடில்யர்  கூறியன அனைத்தையும், அப்படியே முழுமையாகத் தருகின்றேன். “நிலவழி நெடுஞ்சாலையைப் பொறுத்தமட்டில், இமாலயத்திற்குச் செல்லும் வழி, தட்சிண பரதத்திற்குச் செல்லும் வழியினும் மேலானது என்று கூறுகிறார் ஆசிரியர். வெகு தொலைவில் உள்ள முன்னதிலிருந்து யானைகள், குதிரைகள், நறுமணப் பொருள் வகைகள், தந்தம், தோல் மிகமிக நேர்த்தியான பொன், வெள்ளி அணிகலன்கள் வந்தன. அப்படி இல்லாமல், ஆட்டு மயிர்க்கம்பளங்கள் நீங்கலாக, தோல் குதிரை, சங்குகள், வைரம், நீலம் முதலாம் மாணிக்கங்கள், பொன்னாலான அணிகலன்கள் தட்சிண பாரதத்திலி...