ஒன்பதும் ஒன்றும் பத்து! தமிழே நம் சொத்து ! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒன்பதும் ஒன்றும் பத்து
தமிழே நம் சொத்து !
ஒன்றும் ஒன்றும் இரண்டு
உழைப்பால் வெற்றி உண்டு
இரண்டும் ஒன்றும் மூன்று
முக்காலியின் கால்கள் மூன்று
மூன்றும் ஒன்றும் நான்கு
நாற்காலியின் கால்கள் நான்கு
நான்கும் ஒன்றும் ஐந்து
பெருங்காப்பியங்கள் மொத்தம் ஐந்து
ஐந்தும் ஒன்றும் ஆறு
மக்களின் அறிவு ஆறு
ஆறும் ஒன்றும் ஏழு
கடை வள்ளல் எண்ணிக்கை ஏழு
ஏழும் ஒன்றும் எட்டு
உடலில் சாணின் அளவு எட்டு
எட்டும் ஒன்றும் ஒன்பது
தொல்காப்பிய இயல்கள் மூ ஒன்பது
ஒன்பதும் ஒன்றும் பத்து
தமிழே நம் சொத்து!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Comments
Post a Comment