அரங்கனின் குறள் ஒளி 1.காலத்தைத் தேர்ந்தால் வெற்றிகள் அமையும்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 June 2021 No Comment அரங்கனின் குறள் ஒளி 1.காலத்தைத் தேர்ந்தால் வெற்றிகள் அமையும் பொருந்தும் காலத்தை ஆராய்ந்து தேர்க; விருந்தென அமையும் வெற்றிகள் எல்லாம். 1.1,0.0.நுழைவாயில்: மேற்கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பொருந்தும் காலத்தை ஆராய்ந்து, அறிந்து தேர்வு செய்ய வேண் டும். காலத்தைத் தேர்ந்த பின்னர்த் தம் ஆற்றல் முழுவதையும் திரட்ட வேண்டும்; நம்பிக்கையை நெஞ்சில் பெருக்க வேண்டும்; அறிவு ஆற்றலால் சிந்தித்து, செயலின் அருமையை உணர்ந்து, அதை வெல்வதற்கு உரிய வழிமுறைகளைத் திட்டமிடல் வேண் டும்; இறுதியில் செயலில் இறங்க வேண்டும்; 1.2.0.0 .பொருந்தும் காலத்தை ஆராய்ந்து தேர்க; ...