கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்!-ஆற்காடு க.குமரன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 24 November 2020 No Comment கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்! புயல் எச்சரிக்கை! நடுவண் அரசு ஆலோசனை நிதியுதவிக்கு மக்களிடம் கையேந்தலாமா என்று! மாநில அரசு ஆலோசனை மத்திய அரசிடம் கையேந்த லாமா என்று! மக்கள் குழப்பத்தில் யாரிடம் கையேந்த லாம் என்று! யாரிடமும் கையேந்தாமல் வாரி வழங்கிய வானம் பார்க்கிறது வேடிக்கை வெள்ளமும் வறட்சியும் வந்து போவது வாடிக்கை இதைக் கொண்டு வாழ்வது என்னவோ அரசும் அதிகாரிகளும் வாடுவது என்னவோ மக்களும் மண்ணும் பிச்சை எடுக்க கூடாது என்றுதான் மழை பெய்கிறது அதை வைத்துப் பிச்சை எடுக்கும் மக்களும் அரசும் ! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததைப்போல காலில் விழுந்து கதறிய மழையைக் கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கும் நாம்! இவண் ஆற்காடு க குமரன் 9789814114