Skip to main content

மூச்சுக் காற்றாய் என் தமிழ்! – ஆற்காடு க.குமரன்

அகரமுதல

மூச்சுக் காற்றாய் என் தமிழ்!

 தாயின்றி எவனுமில்லை 
தாய் மொழியின்றி ஏதுமில்லை
வளைந்து நெளிந்து குழைந்து
மூக்கோடு பேசும்
மூச்சுக் காற்றாய் என் தமிழ்
பெருமூச்சு நெடில்
சிறு மூச்சு குறில்
மருத்துவமும் கண்டது
மகத்துவமும் கொண்டது 
என் தமிழ்
ரை மாத்திரை
கால் மாத்திரை 
முழு மாத்திரை
இலக்கணத்தோடு
இனியதமிழ்
மிழ் ஒன்றே
நாவை நடமாடச் செய்யும்
அயல் மொழிகள் நுனி  நாக்கோடு
எச்சில் போல் சிதறும்
பேசிப்பார் அஃதுனக்குப் புரியும்
தாய்ப்பாலும் கள்ளிப்பாலும்
வெண்மைதான் பருகிப்பார்
புரியும் உண்மைதான்
உயிரும் மெய்யும் கலந்த உன்னத மொழி
வாசித்துப் பார் உதயமாகும் 
மழலை உணர்வு.
ழுதிப் பார் 
என் எழுத்துகள்
அத்தனையும் ஓவியங்கள்
ட்டியவளுக்காகப் பெற்றவளைத்
தவிக்கவிடும்
கயவர்களே!
ட்டியவளும் தாயாவாள்
காலத்தே தனியா வாள்
உணர்ந்திடு! திருந்திடு!
ங்கம் கண்ட 
தங்கம் அது
வீரம் நிறைந்த சிங்கம் இது!
மூச்சு பேச்சு 
உடல் உயிர்
எண்ணம் எழுத்து
இயக்கம் எதிலும் இருப்பது என் தமிழ்
யிரும் மெய்யும் இணைந்ததே மனிதப்பிறவி
மனிதனாய்ப் பிறந்தவன் தமிழனே!

இவண்
ஆற்காடு க.குமரன்
9789814114

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்