மூச்சுக் காற்றாய் என் தமிழ்! – ஆற்காடு க.குமரன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ்! தா யின்றி எவனுமில்லை தாய் மொழியின்றி ஏதுமில்லை வளைந்து நெளிந்து குழைந்து மூ க்கோடு பேசும் மூச்சுக் காற்றாய் என் தமிழ் பெ ருமூச்சு நெடில் சிறு மூச்சு குறில் மருத்துவமும் கண்டது மகத்துவமும் கொண்டது என் தமிழ் அ ரை மாத்திரை கால் மாத்திரை முழு மாத்திரை இலக்கணத்தோடு இனியதமிழ் த மிழ் ஒன்றே நாவை நடமாடச் செய்யும் அயல் மொழிகள் நுனி நாக்கோடு எச்சில் போல் சிதறும் பேசிப்பார் அஃதுனக்குப் புரியும் தா ய்ப்பாலும் கள்ளிப்பாலும் வெண்மைதான் பருகிப்பார் புரியும் உண்மைதான் உயிரும் மெய்யும் கலந்த உன்னத மொழி வா சித்துப் பார் உதயமாகும் மழலை உணர்வு. எ ழுதிப் பார் என் எழுத்துகள் அத்தனையும் ஓவியங்கள் க ட்டியவளுக்காகப் பெற்றவளைத் தவிக்கவிடும் கயவர்களே! க ட்டியவளும் தாயாவாள் காலத்தே தனியா வாள் உணர்ந்திடு! திருந்திடு! ச ங்க...