நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 அட்டோபர் 2019 கருத்திற்காக.. நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்! கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. ( நாலடியார் பாடல் 25 ) பொருள்: உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்! சொல் விளக்கம்: கணம் கொண்டு = கூட்டமாகக் கூடிக்கொண்டு; சுற்றத்தார் = உறவினர்; கல்லென்று = கலீல் என்னும் ஒலி உண்டாக; அலற = புலம்பியழ; பிணம் = பிணத்தை; கொண்டு = எடுத்துக்கொண்டு; காடு = சுடுகாட்டில் அல்லது இடுகாட்டில்; உய்ப்பார் = வைப்பவரை; கண்டும் = பார...