அகநானூற்றில் ஊர்கள்: 4/7 – தி. இராதா
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 23 நவம்பர் 2018 கருத்திற்காக.. (அகநானூற்றில் ஊர்கள் 3/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில் ஊர்கள் -4/7 ஊனூர் ஊனூர், தழும்பன் என்ற குறுநில மன்னன் ஆண்ட ஊர் ஆகும். இவ்வூர் மருங்கூர் பட்டினத்திற்கு அருகில் உள்ளது. முழங்கும் கடல் அலைகள் காலைப்பொழுது கரைவந்து மோதும் நெல்வளம் மிக்க ஊர். காதல் பறவையான மகன்றில் பறவைகள் வாழுமிடமாக ஊனூர் திகழ்கின்றது என்பதனை, “ பழம்பல் நெல்லின் ஊனூர் ஆங்கன் ” (அகநானூறு 220) மன்னன் பெருங்கொடை வழங்கும் சிறப்பினை உடையவன் என்பதை, “…….. தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊனூர் உம்பர் ” ...