அகநானூற்றில் ஊர்கள் 1/7 – தி. இராதா
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 அக்தோபர் 2018 ஒருவர் கருத்திட்டுள்ளார் அகநானூற்றில் ஊர்கள் (1/7) ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ’ சங்கக் காலத்தின் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள். எந்த இலக்கியத்திற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் சங்க இலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கிய நூல்களில் பல ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சில பெயர்கள் இன்றும் வழக்கில் மக்களால் வழங்கி வருகின்றன. அகநானூறு அகநானூறு சார்ந்த பாடல்களில் அகவாழ்க்கை மட்டும் அல்லாமல் அப்பாடல்களில் சங்கக்கால மக்கள் வாழ்ந்த ஊர்கள், தலைவன், மன்னன், மன்னனின் நாடு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் பல இடம் பெற்றுள்ளன. அகநானூற்றில் 40க்கு மேற்பட்ட ஊர்களி...