Posts

Showing posts from September, 2018

வன்மை எனக்குஅருள்வாய்! – இளவல்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. வன்மை எனக்குஅருள்வாய்  ! அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின் எனை அழைத்திடல் ஏற்றதென நினைத்திடில் உடனே நீ வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல் கழிபேரன்பு கொண்டோர்க்கே என்றனுக்கு உதவிடுவாய் தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே ஏனென்று கேட்பையோ உன்விழைவே சாலச்சிறந்ததுஎன ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் உதவிடுவாய்  ஓ இறைவா அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய் உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும் அச்சத்தினாலன்று என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே – இளவல்

பெரியார் யார்? – கவிவேந்தர் கா.வேழவேந்தன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. பெரியார் யார்?  மலம் அள்ளும் தொழிலாளி இல்லாவிட்டால், வாழும் ஊர் நாறிவிடும்; மேலும் மேலும் பலதொற்று நோய்களெலாம் பரவும்; வாட்டும்! பல்வேறு வகை உடைகள் சுமந்து சென்று சலவைசெயும் பாட்டாளி இல்லையென்றால் தனித்தோற்றம் நமக்கேது? எழிலும் ஏது? விலங்கினின்று வேறுபட்டோன் மனிதன் என்னும் விழுமியம்தான் நமக்குண்டா? பொலிவும் உண்டா? சிகைதிருத்தி அழகூட்டும் உயர்பாட் டாளி திருநாட்டில் இல்லாமற் போனால், நாமும் குகைமனிதக் குரங்குகள்போல், கரடி கள்போல் கொடுமைமிகு தோற்றமுடன் இருப்போம்! நன்கு வகைவகையாய் உடைநெய்து எழிலைச் சேர்க்கும் வண்மைமிகு நெசவாளி இல்லா விட்டால், அகம்மகிழ அணிகின்ற ஆடை ஏது? அன்றாட நாகரிகம் தழைத்தல் ஏது? வசிப்பதற்கே வீடுகட்டும் நற்பாட் டாளி மண்மீது இலையென்றால் காப்பும் ஏது? பசியோட்டும் ஏருழவன் இல்லா விட்டால், பாரகத்தில் உயிர்ஏது? உலகே ஏது? விசித்திரமாய் இவரெல்லாம் ‘சூத்திரர்’ என்றார் வீண்வரு...

வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! – கவிஞர் கலி.பூங்குன்றன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! ஆடு மாடு ஆடு மாடு ஓட்டி வந்த ஓட்டி வந்த இலம்பாடிக் கூட்டம் ஒன்று இலம்பாடிக் கூட்டம் ஒன்று இந்துத்துவா என்று சொல்லி இந்துத்துவா என்று சொல்லி மேயப்பார்த்தது! ஈரோட்டுக் கையிருப்பு ஈரோட்டுக் கையிருப்பு கனலைக் கண்டதும் கனலைக் கண்டதும் தலைதெறிக்க தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இப்பொழுதோ இப்பொழுதோ குலுக்கி மினுக்கி குலுக்கி மினுக்கி ஆன்மிக மோகினியாக ஆன்மிக மோகினியாக ஆலிங்கனம் ஆலிங்கனம் செய்யத் துடிக்குது – ஆரியம் செய்யத் துடிக்குது! எந்த வேடம் எந்த வேடம் போட்டாலென்ன, போட்டாலென்ன குத்திக் கிழித்தால் குத்திக் கிழித்தால் கூடிக் குலவும் கூடிக் குலவும் ஈறும்பேனும் ஈறும்பேனும் பார்ப்பனீயமே! ஆர்.எசு.எசு. என்றாலும் ஆர்.எசு.எசு. என்றாலும் பா. ச.க. என்றாலும் பா. ச.க. என்றாலும் இரத்தம் குடிக்கும் இரத்தம் குடிக்கும் பார்ப்பனீய பார்ப்பனீய ...

பெரியாரைப் படி! உரிமையைப் பிடி! – கவிஞர் கண்மதியன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. இளைய சமூகமே! பெரியாரைப் படி! எரிமலையாய் எழுந்துன்  உரிமையைப் பிடி! காற்றும் மழையும் புயலும் – இங்கே காண்ப துண்டோ நாட்டின் எல்லை? ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை? போற்றும் மனித நேயம் – ஒன்றே புத்தியில் கொண்ட தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’ இம்மண் கண்ட மானுட ஏக்கம்! கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார்! விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும்! மேற்கிலோர் கதிரோன் சென்றால் இங்கே கிழக்கிலோர் கதிரோன் பெரியார் – வந்தார்! கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கென்(று) உலகெலாம் பெரியார் பகுத்தறிவு – வெளிச்சம் உலாவர மடமைகள் பூண்ட(து) அச்சம்! உயரத்தி லிருந்து கண்ணன் – என்பான் ஓதிய தாக உளறி வைத்த உயர்ந்தான் தாழ்ந்தான் என்னும் – ஆரியர் உளுத்துப் போன வர்ண பேதக் கயமை நெறிகள் யாவும் – பெரியார் கடைக்கண் பார்வை கண்ட போ...

மறைமலையடிகள் – சிராப்பள்ளி மாதேவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         17 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. மறைமலை என்னும் மாமலையே சிராப்பள்ளி மாதேவன்

தமிழ் – ச.சுதாகர்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         16 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. தமிழ் தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க, தொடங்கினேன் கற்க தொல் காப்பியம். குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல் எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்; என் உயிர் உள்ள வரை, உணவு போல் உயிர்மொழித் தமிழை மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே! ச.சுதாகர்

எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         15 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. எம்மை மகிழ்விப்பாய்! என் எழுதுகோல் களத்தில் உன்பெயர்தான் முளைக்கிறது என் இதழ்ச் செடியில் உன்பெயர்தான் பூக்கிறது என் மன ஊஞ்சலில் உன்பெயர்தான் ஆடுகிறது என் கண்ஆடிகளில் உன்பெயர்தான் தெரிகிறது என் செவி மணிகளில் உன்பெயர்தான் ஒலிக்கிறது என் புத்தகத் தோட்டத்தில் உன்பெயர்தான் மணக்கிறது என் இல்லக் கோயிலில் உன்பெயர்தான் குடியுள்ளது என் எண்ண வானத்தில் உன்பெயர்தான் பறக்கிறது என் வாணாளில் வந்து எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்