மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அதன் பின்னர் ஏற்பட்ட அயலவர் படையெடுப்பாலும், ஆரியப்பண்பாட்டு மொழியான சமசுகிருதக் கலப்பாலும் தமிழின்நிலை தாழ்வுற்றது. மீண்டும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழை மீட்டுருவாக்கும் பணியினைப் புலிப்பாய்ச்சலோடு தொடங்கியவர்கள் தமிழறிஞர்களே ஆவர். பிரித்தானியர் ஆட்சியில் நான்கு தேசிய இனத்தவரின் நிலமாக சென்னை மாகாணம் இருந்தது. அதில் ஒன்றான தமிழ்த் தேசிய இனம் மட்டுந்தான் ஆரியப் பண்பாட்டு மொழியான சமசுகிருதத்தையும், இந்தியையும் எதிர்த்துப் போரிட்டது. இதை முன் நின்று தொடங்கி வைத்த பெருமை தமிழறிஞர்களையே சாரும். தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் தாயகம் ஆகிய மூன்றும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிக்கற்கள். தமிழ்மொழி மீட்புப் போராட்டத்தில் முன் நின்றவர்கள்தாம் தமிழினத்தை ‘திராவிடர்’ என்று திரித்துக் கூறியதையும் கடுமையாக எதிர்த்தனர். அத்தோட...