மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்
அகரமுதல 162, கார்த்திகை12,2047 / நவம்பர் 27,2016 இலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2016 கருத்திற்காக.. மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 1/6 “இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும் தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய் வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல் வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்” எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே …5 “அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்; பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்; முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில் ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்! …10 கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை; உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்; செல்வரை நாடின்...