செஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி

செஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி

49KFC01 
(புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி)

17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள்

  வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. வட அமெரிக்க மக்கள், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வெறி மோகத்தில் அலைகிறார்கள் என்றால், சீனர்கள் அதே போல தம் வாழ்நிலையை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
  பண்டைய சீனாவின் மன்னர் காலம் முதல் இன்றுவரை கோலோச்சி வந்த பல நல்ல பழக்கங்களைச்சீனர்கள் இன்று மறந்துவிட்டனர் எனப் பல மூத்த சீனர்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
 49mcdonalds-china
  சீனாவின் வீட்டுக் கட்டமைப்புகள் தனிச்சிறப்பானவை. தமிழகத்தின் பல பகுதிகளிலும், வீட்டு வாசலுக்கு அருகில் திண்ணை இருக்கும். அதில், வெளியூரிலிருந்து வருபவர்கள் இரவு பேருந்தை விட்டுவிட்டால், அதில் படுத்து உறங்கிவிட்டுச் செல்வார்கள். மாலை நேரங்களில் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள், அங்கு ஒன்றாகக் கூடி அமர்ந்து பேசுவார்கள். ஆனால், இன்றைக்குத் திண்ணைகளை வண்டி நிறுத்துமிடமாக மாற்றியும், கூடிப் பேசிப் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கியும் அந்த இடம் வெற்றிடமாக்கப்பட்டது.
  செட்டிநாட்டு கட்டமைப்பில் கட்டப்பட்ட பல வீடுகள், பின்னர் ஐரோப்பிய பாணியிலான வீடுகளாக மாற்றப்பட்டன. புதுச்சேரியில் ஆங்காங்கு மாற்றப்படாமல் இருக்கும் செட்டிநாட்டு முறையிலான திண்ணை அமைப்புகளுடன் கூடிய வீடுகளை புதுச்சேரி அரசு, தனது அரசு செலவில் புதுப்பித்து வருகின்றது. அந்த வீடுகள் பலவற்றையும் இன்றைக்கு, பல உணவகங்கள் வாங்கிவிட்டன. இன்றைக்கு, புதுச்சேரியின் பெருமை என அந்த வீட்டைக் காட்டி, உள்ளே உணவகங்கள் இயங்குகின்றன.
 49mcdonalds-china02
  அதே போலத்தான், சீனாவில், சீனர்களின் பரம்பரைக் கட்டட அமைப்புகளுடன், கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்ட பல வீடுகள் இன்றைக்கு பெரும்பாலும் அழிந்துவிட்டன. எங்கு காணினும், மிகப்பெரும் கட்டடங்கள் வட அமெரிக்கா பாணியில் கட்டப்படுகின்றன. பெரிய பெரிய அடுக்கங்கள் எழுப்பப்படுகின்றன. குறைந்தபட்சம் 10 மாடி அடுக்குகள் கொண்ட குடியிருப்புகள் முதல், 30 மாடி அடுக்குகள் கொண்ட குடியிருப்புவரை சியான் நகரத்தில் காணப்படுகின்றன.
49kfc-china02
  ‘கே.எப்.சி’. – ‘மெக்டொனால்டு’ முதலான பல பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் கடைகளைச் சீனாவின் பரம்பரைக வீட்டுக் கட்டமைப்புடன் வடிவமைத்திருக்கின்றன. சீனர்களின் பழமையைக் காட்டி, வட அமெரிக்காவின் பொருட்களை இங்கு விற்றுத் தீர்க்க வேண்டுமென்பது இவர்களது விருப்பம்! அது இயல்பாக நடந்து கொண்டுள்ளது
aruna


Comments

  1. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue