தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும் இலக்குவனார் திருவள்ளுவன் 26 அக்தோபர் 2014 கருத்திற்காக.. இயல் பகுப்பும் நூற்பா அளவும் தொல்காப்பியர் நமக்கு அருளிய தொல்காப்பியம் எனும் நூலில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 9 இயல்கள் உள்ளன. இயல்களின் பெயர்களையும் நூற்பா எண்ணிக்கையையும் அறிவதற்குத்துணை செய்யும பாக்கள் வருமாறு: எழுத்ததிகார இயல்கள் நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு, மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம் உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம், தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு. 1. நூல் மரபு, 2. மொழி மரபு, 3. பிறப்பியல், 4. புணரியல், 5 தொகை மரபு, 6 உருபியல், 7. உயிர்மயங்கியல், 8. புள்ளி மயங்கியல், 9. குற்றியல் உகரப் புணரியல் ஆகியன எழுத்ததிகார இயல்கள். +++ சொல்லதிகார இயல்கள் கிளவி ஆக்கமே, கிளர் வேற்றுமையே ஒளி வேற்றுமை மயக்கத்தோடு , விளி மரபு, தேற்றும் பெயர், வினைச் சொல், சேரும் இடை, உரிச்சொல், தோற்றியிடும் எச்ச...