அவன் பெரியசாமி
செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி - கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை மேய்வதனைக் கண்டு விட்டேன் தேராதான் றன்மகளைப் பெண்டா ளர்க்குத் திட்டமிட்ட செயல்கண்டே னந்தோ நொந்தேன் 3. காப்பதற்குக் கடமைகொண்டார் கயமை கொண்டார் கன்னல்தமி ழன்னாய்நின் வாழ்வைப் போக்க காப்புறையு முழங்கிவிட்டார் நாசம் நாசம் நாங்களினிப் பொறுப்பதிலை யுறங்கோ மொல்லை மாப்பெரிய போர் தொடங்கும் தீயே மூளும் மண்டழலை யென்னுடலி லேற்றி மானங் காப்பதற்கு முன்செல்வேன் வாரீர் வாரீர். காளையரே சிங்கங்காள் என்றான் சென்றான். 4. ...