To forget good turns is not good: நன்றி மறப்பது நன்றன்று
நன்றி மறப்பது நன்றன்று
எங்களைப் படைத்தவன் நாட்டம் - ஓர்
இணையிலா நன்றியின் தேட்டம்;
இங்கொரு நன்மையும் எட்டும் -வரும்
எழில்மிகு மறுமையும் கிட்டும்!
வாய்ப்புகள் வழங்கியோன் இறைவன் -இந்த
வாயால் மறுத்தலும் முறையோ?,
தேய்ந்திடும் பூமியில் வாழ்வு- நீயும்
தொழுதலும் நன்றியின் பதிவு
அமுதினை வழங்கிடும் இறையை- அவனும்
அருளியத் தேன்மொழி மறையை
நமதெனப் போற்றிடும் மனமும்- இனி
நன்றியைக் நவின்றிடு தினமும்
காலமும் கரைவதைக் காண்பாய்-நம்
காசுகள் குறைவதைக் காண்பாய்,
ஞாலமும் வேண்டுதல் நன்றி - இறை
ஞானிகள் வேண்டிய வழியில்!
அற்புதப் படைப்பெனும் உடலாம்- அதனுள்
அளவிலா என்புகள் உண்டாம்
கற்பனை செய்திட முடியா -இறையின்
கருணையை நன்றியால் நிரப்பு!
உதவிகள் செய்திடும் உன்றன் – எல்லா
உறவுகள் நட்புகளை இன்றே
கதவினத் தட்டியே நன்றி- கூற
கலக்கமும் தயக்கமும் இன்றி!
விடைபெறும் நாளினை எண்ணி- நீயும்
விதைத்திடு நனறியெனும் செடியை
தடையிலா நன்மைகள் கொட்டும்- உன்றன்
தாளினைத் திறந்திடத் தட்டும்!
சமநிலைச் சிந்து
“கவியன்பன்” கலாம் , அதிராம்பட்டினம்(பாடசாலை), அபுதபி(தொழிற்சாலை)
அலைபேசி: 00971-508351499, வலைப்பூத் தோட்டம்: http://www.kalaamkathir. blogspot.com/
--
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir. blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 00971-50-8351499
Comments
Post a Comment