Iniyavanukku 70; ilakkiya veedthikku 34
கவின் இல்லம் இலக்கிய வீதிக்கு 34 தமிழ்முனி இனியவனுக்கு 70 Apr 21, 2012 by தமிழ்வேல் in விருந்தினர் அறை 0 comments 50 ஆண்டுகளுக்குமேலாக எழுத்தாளராகப் பணி, 33 ஆண்டுகள் இடையறாத அமைப்புப் பணி எனத் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிவரும் ‘இலக்கிய வீதி’ அமைப்பாளர் இனியவனின் 70ம் ஆண்டு விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் பிற இடங்களிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். அதை முன்னிட்டு அவரிடம் ஒரு நேர்காணல்... இனியவன் பெயரில் மட்டுமல்ல, நேரிலும் இனியவராகவே இருக்கிறார். இனியவன் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மட்டுமல்ல, பல அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து இன்றுவரை செயல்பட்டுவருபவர். அதோடு தமிழின் தற்கால இலக்கியத்துக்கு வளம் சேர்க்க பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. • இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்.. “9ஆம் வகுப்பு படிக்கும்போதே ‘மாணவர் குரல்’ என்ற இதழில் முதல் சிறுகதையை எழுதினேன். அது பரிசும் பெற்றது. அந்த ஊக்க...