Posts

Showing posts from January, 2011

New Thamizh Anthem: புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.

மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள                             புதிய தமிழ் வாழ்த்துப்பாடல். http://voiceofthf.blogspot.com/2011/01/blog-post_27.html பாட்டைக் கேட்டருள்வீர்! ----------------------- நிலைபெறநீ வாழியவே! ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ குரல்: துருவன், பாபு லோகநாதன் காப்பியனை ஈன்றவளே!      காப்பியங்கள் கண்டவளே!    கலைவளர்த்த தமிழகத்தின்      தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில்      தனிப்பெருமை கொண்டவளே!   தமிழரொடு புலம்பெயர்ந்து      தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில்         சிங்கைதனில் ஈழமண்ணில்    இலக்கியமாய் வழக்கியலாய்         இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின்         புத்தாக்கம் அத்தனைக்கும...

Eezham pote neelaavanan: ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன்

Image
ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன் நினைவு நாள் இன்று January 11th, 2011 வரலாற்றுப்பதிவுகள் கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள் கவிஞர் நீலாவணன் 31- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு – குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று “நீங்கள் நூற்றுக் கணக்கானவர்களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்...

Ilakkuvanar centenary poems: இலக்குவனார் நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதைகள்

Image
இலக்குவனார் நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதைகள் இளவரசு அமிழ்தன்           “தொல்காப்பியமும் திருக்குறளின் படி நடந்தார் இலக்குவனார் இறுதிவரை தமிழ் மூச்சென்று வாழ்ந்தார்” கவிஞர் குமாரசாமி  : இலக்குவ னார்தமிழ் மேகம் – இவர் எந்தமிழ் மழையாலே தீர்த்தார் தாகம் இலக்(கு)கியவர் பெயரிலும் உண்டு – தமிழ் எங்குமே ஒளிவீச இசைத்தவர் அன்று தமிழாலே வாழ்ந்தவர் பல்லோர் – இவர் தமிழோடு வாழவே சிறைசென்ற நல்லார் ! தமிழையே அகமாக்கிக் கொண்டார் – இன்பத் தமிழன்றி இவர்வேறு சுகமென்ன கண்டார்?      கவிஞர் வி.செ. கந்தசாமி  : எம்மொழி செம்மொழி ஏற்றமிகு மொழி என்றெமக் குணர்த்தியவர் அம்மொழி தன்னை இகழ்ந்த தருக்கரை அழித்திட ஆர்த்தவராம் காப்போமென மொழி என்றேயுரைத்துக் களம்பல கண்டவராம் மீட்போம் இழந்த புகழை என்றே மேன்மை கொண்டவராம் ஒல்காப் புகழ்தொல் காப்பியத் திற்கே உரையும் கண்டவராம் தொல்லுல கெல்லாம் அந்நூல் பரவிடத் தொகுத்தனர் ஆங்கிலத்தில் இது மரபுக் கவிதை வரிசையில் அசையை இசையோடு பாடினார் என மறைமலையனார் பாராட்டினார். கவிஞர...