3 ] தமிழ்நாடு , க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 09 February 2026 அ கரமுதல (க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – தொடர்ச்சி) தமிழ்நாடு க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ்நாடு மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்தில் இற்றை நாள்போல் அரசியல் கட்சிகளோ சமூகச் சீர்திருத்க் கட்சிகளோ இருந்ததாகச் சான்றுகள் எவையும் இலலை. ஏனெனில், அன்று அரசர்கள் மக்கள் நலனே தங்கள் நலன் எனக் கருதிய காலம். மக்களும் ‘ மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம் ’ எனக் கருதி வாழ்நதனர். சங்க காலத்திற்குப் பிறகு ஆண்ட அரசர்கள் ஆட்சிப் பொறுப்பைப் பொருட்படுத்தாமையால் அமைச்சர்களே சிலர் முற்பட்டு ஆட்சியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினர். அப்போதுதான் மக்களிடையே அரசப் பற்றின்மை தோன்றி அமைச்சர்கள்பால் கருத்தைச் செலுத்தலாயினர். ஆட்சி சரியில்லாத காரணத்தால் நாட்டில் ‘வற்கடம்’ உண்டாயிற்று. மக்கள் ஆறலைத்தல் முதலிய தீய செயல்களில் ஈடபடலாயினர். சிறுசிறு கூட்டத்தினராகச் சேர்ந்து கொண்டனர். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில...