கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2026 அ கரமுதல (கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது. ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் பற்றி அறிய அவாவுவதால் இக்காலம் பற்றி எழுத முனைந்தோம். தமிழ்வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்நாட்டின் தொல்பழம் வரலாறு மறைக்கப்பட்டு கட்டுக்கதைகளாகிய இராமாயணம், மாபாரதம் முதலிய ஆரியர் பற்றிய நூல்கள் தமிழ் மக்களிடையே பரப்பப்படுகிறது . ஏனெனில், அதிகாரம் அவர்களிடம் உள்ளது. இன...