Posts

Showing posts from 2026

க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         18 January 2026         அ கரமுதல (கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப்    போகிறாய்? க.  உன் தாய்மொழி பல வகையிலும் உருக்   குலைக்கப்படுகிறது.   உ.  உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை    ௩.  உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை!   வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால்   எழுதியுளர்.     ௪.  உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு         அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில்   இல்லை.    ரு.   உனது பண்டைய பண்பாடு, வரலாறுகள் இருட்டடிப்பு        செய்யப் படுகின்றன.    ௬… இந்திய வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் உன...

கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         04 January 2026         அ கரமுதல (கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை ஆரியர் வருகையால் தமிழ் மொழி சிதைந்தது; தமிழர் பண்பாடு மறைந்தது; தமிழர் கணக்கியல் முறை தகர்ந்தது; தமிழர் காலம் கணக்கிடும் முறையும் ஒழிந்தது.  இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் கரணியம் தமிழரின் அயல்மொழி, அயல்நாகரிகத்தின்பால் உள்ள ஆசையும், தமிழரின் ஏமாளித்தனமும் எனலாம். இன்றும் அந்நிலையே நீடிக்கிறது. ஏதோ அத்திபூத்தாற்போல, ஆரணி பாண்டுரங்கன் (பெயர் தமிழன்று) போன்ற சில உணர்வாளர் மறைந்தும், மறந்தும் போன தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் பற்றி அறிய அவாவுவதால் இக்காலம் பற்றி எழுத முனைந்தோம். தமிழ்வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்நாட்டின் தொல்பழம் வரலாறு மறைக்கப்பட்டு கட்டுக்கதைகளாகிய இராமாயணம், மாபாரதம் முதலிய ஆரியர் பற்றிய நூல்கள் தமிழ் மக்களிடையே பரப்பப்படுகிறது . ஏனெனில், அதிகாரம் அவர்களிடம் உள்ளது. இன...