கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2025 அ கரமுதல ( க௪. தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல் பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் அரும்பாடுபட்டு ஆய்வு செய்து, இராசீவ் கொலைக்கு ஈழத்தமிழ் விடுதலைப்புலிகள் இயக்கந்தான் மூலகாரணம் என்று முடிவு செய்து பலரைக் கைது செய்து சிறைக்கோட்டத்திலிட்டனர். அன்றியும், விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திரு...