கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! – திருத்துறைக்கிழார்
ஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 25 October 2025 அ கரமுதல ( கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ . தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம் சாற்றி அவர்கள் மீது தடை விதித்துள்ளது முறையா? தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்காக இன்றும் பரிந்து உரிமைக்குரல் கொடுக்கும் இந்திய அரசு, தமிழ்நாட்டுத் தமிழர் இலங்கைத்தமிழர்க்கு எவ்வகை உதவியும் செய்யக் கூடாதென்று ...