ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 22 August 2025 அ கரமுதல (௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்- தொடர்ச் சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி . பொ . பழனிவேலனார் ஆ.தமிழர் ரு . பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் ‘ தமிழில் என்ன இருக்கிறது ? ’ – இந்த வினா தந்தை பெரியாரவர்களால் எழுப்பப்பட்டது . அது மட்டுமா ? தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பதும் அவரது கூற்றாகும் “ இவற்றைச் சொன்னதன் உட்பொருள் யாது ? ” என்பதே ஈண்டு ஆராயற்பாலது . பெரியாரவர்கள் , தமிழின் மீதுள்ள வெறுப்பினால் இவ்வாறு கூறினார்களா ? என்றால் இல்லை ! இன்றுள்ள தமிழ்நூல்கள் யாவும் – திருக்குறள் உட்பட – மக்கள் பின்பற்றவேண்டிய அறநெறிகளையும், வாழ்க்கை முறை...