௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!-புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2025 அ கரமுதல (௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது. அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர , சோழ , பாண்டிய அரசர்களால் சீராட்டி , பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி , சமயம் , நாகரிகம் , பண்பாடு முதலியவற்றையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர். அல்லாமலும் , தம் நாட்டு மக்களையும் இங்கு குடியேற்றினர். அதனால் , தமிழ் தன் செம்மை , சீர்மை க...