தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 17/17

அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 December 2021 No Comment (தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 17/17 உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும் அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானை அயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின் உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானை உயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை (81) தமிழ்நாட்டெல்லை நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லை தென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானை தென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில் இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானை எதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை (82) முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ் சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானை சென்னை தமிழருக்கே சேரவேண்டின் ஆந்திரர்கள் முன்னித் தமதாக்க முயலுவதேன் அம்மானை முயலவே விட்டால்நாம் மூடராவோம் அம்மானை (83) தனித்தமிழ்க் கிளர்ச்சி அன்று...