Posts

Showing posts from April, 2021

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
அகரமுதல  இலக்குவனார் திருவள்ளுவன்         01 May 2021         No Comment சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சங்கத் தமிழே சாய்ந்தாடு! செந்தமிழ்ப் பாவே சாய்ந்தாடு! கலைவளர் தமிழே சாய்ந்தாடு! ஏழிசைத்தமிழே சாய்ந்தாடு! குன்றாத் தமிழே சாய்ந்தாடு!   சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சீர்மிகு தமிழே சாய்ந்தாடு! தூய தமிழே சாய்ந்தாடு! தெய்வத் தமிழே சாய்ந்தாடு! மூவாத் தமிழே சாய்ந்தாடு! மேன்மைத் தமிழே சாய்ந்தாடு!   சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சங்கத் தமிழே சாய்ந்தாடு! இலக்குவனார் திருவள்ளுவன்

எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 April 2021         No Comment எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!   ஒன்றும் ஒன்றும் இரண்டு யாவர்க்கும் கண்கள் இரண்டு   ஒன்றும் இரண்டும்  மூன்று இயல் இசை நாடகம் மூன்று   ஒன்றும் மூன்றும் நான்கு விலங்கின் கால்கள் நான்கு   ஒன்றும் நான்கும் ஐந்து கையில் விரல்கள் ஐந்து   ஒன்றும் ஐந்தும் ஆறு மனிதர்க்கு அறிவு ஆறு   ஒன்றும் ஆறும் ஏழு கிழமைகள் மொத்தம் ஏழு   ஒன்றும் ஏழும் எட்டு தொகை நூல்கள் எட்டு   ஒன்றும் எட்டும் ஒன்பது உயர்மணி வகைகள் ஒன்பது   ஒன்றும் ஒன்பதும் பத்து இருகால் விரல்கள் பத்து   எண்களை நன்றாகக் கற்றிடுவோம்! எண்ணம் சிறந்து வாழ்ந்திடுவோம்!   –  இலக்குவனார் திருவள்ளுவன்

மழலைப்பள்ளி செல்லுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 April 2021         No Comment மழலைப்பள்ளி செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! மழலைப்பள்ளி செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! பாட்டு படிக்கச் செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! கதை கேட்கச் செல்லுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! பறவைகள் பெயர்கள் கேட்டிடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! விலங்குகள் பெயர்கள் தெரிந்திடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! அகர வரிசை அறிந்திடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! ஆடிப்பாடி மகிழ்ந்திடுவோம்!   செல்லுவோம்! செல்லுவோம்! மழலைப்பள்ளி செல்லுவோம்! மனம்மகிழ்ந்து திரும்புவோம்! மற்றவர்க்குச் சொல்லுவோம்!    – இலக்குவனார் திருவள்ளுவன்